பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 87 மெய்மைக்கு வாய்"என்னும் சொல்லையும் காட்டுகின்றது. பிற சொற்களும் இவ்வாறு காட்டுகின்றன. .

ஒரு கட்டழகுக் குமரி சோலையில் தோழியுடன் ஊஞ்ச லாடிக் கொண்டிருந்தாள். அப்பக்கம் வந்த கட்டிளங் குமரன் ஒருவன் ஆசலை ஆட்டவோ என்றான். அவளிடமிருந்து மறுப்போ,"இசைவோ வராததால் அவனாகவே ஊக்கி ஆட்டி னான்." அதனை விரும்பிய அவள் நாணத்தால் அடிபட்டு மயங் கியவள் போன்று வேண்டுமென்றே ஊசலிலிருந்து சாய்ந்தாள். அவனோஅவளது மயக்கத்தை உண்மை என்று நம்பி அதனைத் தனக்கு வாய்ப்பாக்கிக் கொண்டு மயங்கிய அவளைத் தனது இரு கைகளாலும் ஏந்தித் தாங்கினான். இதனைப் பாடும் கலித் தொகை, குமரன், உண்மை எனக்கருதி என்பதை வாயாச் செத்து ' என்னும் சொற்களால் குறிக்கின்றது. இத்தொடரில் "வாயா' என்பதற்கு உண்மையாக என்பது பொருள். இங்கு வாய் என்னும் சொல், தான் மட்டும் நின்று உண்மை என்னும் கருத்தை உணர்த்துகின்றது.

இது போன்றே,

பொய்யாடி அதிர்குரல் வாய் செத்தும் ஆலு இளமயில்"

-நற்றிணை ‘அவை, வாயும் அல்ல: பொய்யும் அல்ல" -பரிபாடல் "வாய்போல் பொய்ம்மொழி கூறல், அஃதெவனோ'

-குறுந்தொகை

弼 ° & - * - k # 'நின் வாய்போல் பொய்ம் மொழி எவ்வமென் களைமோ

-அகநானூறு'

14. கலி, - 37 - 3

15. நற். - 248 - 7 16. பரி. - 5 - 18

17. குறு. - 259 - 5

18, அகம். 3 - 14