பக்கம்:செங்கரும்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அரங்குகளில் இருந்த நாடக மடந்தையர் புறத்தே வந்து அரசனைக் கும்பிட்டு, 'அரசர் பெருமான் வெற்றி மாலையோடு திரும்பட்டும்' என்று வாழ்த் திர்ைகள். அரசவையில் ஆசனத்தில் அமர்ந்து அரசனை ஏத்துவோர் சிலர் உண்டு; அவர்களுக்கு மாகதர் என்று பெயர். அவர்களை விடச் சற்றே பதவியிற் குறைந்தவர்கள் சூதர்; அவர்கள் நின்ற படியே மன்னனைப் புகழவேண்டும். தாளம் கொட்டி மன்னன் புகழைப் பாடுவோர் சிலர் உண்டு; அவர் களுக்கு வைதாளிகர் என்று பெயர். இவர்கள் யாவ ரும், “மன்னர்பிரான் வெற்றி பெறுக! வாழ்க!” என்று வாழ்த்தினுர்கள். யானை வீரர்கள் ஒருபால் வாழ்த்தினர்கள்; குதிரை வீரர்கள் ஒருபுறம் நின்று வாழ்த்துக்கூறி ஞர்கள்; வாளேந்திய வீரர்களும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்தினர்கள். எங்கும் ஒரே உற்சாகம் இத்தகைய கோலாகலத்துடன் சேரன் செங்குட்டுவன் தன் பரி வாரங்களுடனும் படைகளுடனும் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டான். - கடற்கரையின் வழியே வடக்கே சென்ற படை அப்பால் மேலும் சென்று நீலகிரியின் அடிவாரத்தை அடைந்தது. அங்கே பாடிவீடு அமைத்து மன்னனும் பிறரும் தங்கினர். அவன் அங்கே தங்கி யிருத்தலை அறிந்து பலர் அவனைப் பார்க்க வந்தனர். இமயத்தி லிருந்து பொதியமலைக்குச் செல்லும் முனிவர் சிலர் செங்குட்டுவன் இருந்த கூடாரத்தை அடைந்து அவனைக் கண்டனர். மன்னவன் அவர்களை வணங் கின்ை. அவர்கள் செங்குட்டுவனை நோக்கி, “அரசே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/59&oldid=840796" இலிருந்து மீள்விக்கப்பட்டது