பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்மொழி தமிழ்

வாய்மொழி ஆங்கிலம் ஆனாலும்
தாய்மொழி தமிழை மறவாதே!

தமிழைப் படிப்பது தன்மானம்
தெரியாது என்பது அவமானம்
அமுதை வெறுப்பது அறிவீனம்
அங்கே வருவது பலவீனம்!

முன்னைய மொழிகளில் மூத்தமொழி
முன்னோர் தம்மைக் காத்தமொழி
மின்னிய அறிஞர்கள் படித்தமொழி
முதலில் இலக்கியம் பார்த்தமொழி!

விழியில் தூசி விழுந்தவுடன்
விரைந்தே காக்கும் இமைகளைப்போல் மொழியில் மாசும் கலக்காமல்
வளர்த்தே வாழ்வது நம்கடனே!

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/12&oldid=1341960" இலிருந்து மீள்விக்கப்பட்டது