பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

73


இருக்கும் சக்தியை திறமையை நமக்குள் எவ்வளவு என்று தெரிந்கொள்ள வேண்டும். அதற்கு நம்மை நாமே கொஞ்சம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களைப் பற்றியே பேசிப் பேசி, மற்றவர்கள் குறைகளையே ஏசி ஏசி, மற்றவர்கள் மேல் வெறுப்பையே வீசி வீசிப் பழக்கப்பட்டவர்கள் தாம் மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

உன்னைப் பற்றி சிந்தித்துப் பார்’ என்று சில அறிஞர்கள் மக்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.

‘என்னைப் பற்றி நான் சிந்தித்ததால் தான், சிலை வடிக்கும் சிற்பி, சிந்தனைச் சிற்பியானேன்.’ என்று சாக்ரடீஸ் அன்று கூறினார்.

தன்னைப் பற்றி சிந்திப்பது என்பது, தன்னைப் பற்றிப் பெருமையாக மற்றவரிடம் பேச அல்ல. தன்னைப்பற்றி மற்றவரிடம் பீற்றிக்கொள்ள அல்ல. தன்னைப்பற்றி சிந்திப்பது தற்பெருமையை வளர்க்க அல்ல. தனது திறமையை அளக்க. வளர்க்க.

தற்பெருமை தலைகுனிவுக்கு ஆளாக்கி விடும். தனது அரிய திறமையை செல்லரிக்கச் செய்துவிடும். வளரும் பாங்கினை வேரோடு வெட்டிச் சாய்த்து விடும்.

இங்கே நாம் சொல்வது தன் நினைவு. சுய நினைவு.

தனக்குள்ளே திறமையின் தகுதி அளவு என்ன? அதை வளர்க்க தான் என்ன செய்ய வேண்டும்? அதை