பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எங்கே, எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும். என்பது தான் சாமர்த்தியம். சக்தியின் ஆரம்பம்.

நமக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதை நிறைவேற்ற ஒரு நேரம் இருக்கிறது. அதற்குரிய சாமர்த்தியம் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உபத்திரவமாகும்.

உதவி என்பது சொல்லில் இருந்தால், ஏட்டில் சர்க்கரை என்று எழுதியிருப்பது போல் தான். ஏட்டு சர்க்கரை இனிக்காது. பேச்சு உதவி பலிக்காது. பிரயோஜனப் படாது.

மீன் பிடிக்க விரும்புகிறவன், தூண்டில் எடுத்துக் கொண்டு ஆதாரமாக புழுக்களையும் கொண்டு சென்று, மீன்கள் இருக்கும் இடம் தேர்ந்து அமர்ந்து, எச்சரிக்கையுடன் கவனமாக இருந்து, மிதப்பின் நிலையறிந்து செயல் பட்டால் தான், மீன்களைப் பிடிக்க முடியும்.

வீட்டில் படுத்துக் கொண்டால், வீண் தானே! வீட்டுக்கா, மீன்கள் ஓடிவரும்?

நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை, நாளைக்கு நமக்கு - எல்லாம் வந்து விடும். கை கூடிவிடும் என்பதாகும்.

தூரத்தில் தெரிகின்ற மங்கிய பொருளைப் பார்த்துப் பெறும் மகிழ்ச்சியைத் தான் நாம் அனுபவிக்கக் கற்றுக்