பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடி ஆடுவோம்

கூட்டமாக ஒன்றுசேர்ந்து
கூடி ஆடுவோம் -அழிகுத்
தோட்டத்திலே பூக்கள் என்று
சேர்ந்து ஆடுவோம் !

ஒற்றுமையே வலிமை என்று
உரக்கப் பாடுவோம் - பெரும்
வெற்றி என்று வேற்றுமையை
விரட்டிப் போடுவோம்!

போட்டியுள்ள ஆட்டத்திலே
பொறுமை காட்டுவோம் - வெறும்
போட்டிதரும் பொறாமையை
பொசுக்கி ஒட்டுவோம் !

வெற்றிக்காக விதிகளேயே
மீறவே மாட்டோம் - இதை
முற்றும் நாங்கள் புரிந்துகொண்டோம்
மாறவே மாட்டோம் !

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/17&oldid=1341965" இலிருந்து மீள்விக்கப்பட்டது