பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

65


உலக மக்களிடையே உயர்ந்த நிலைமையில் வாழ்கின்றார்கள். உன்னதமான தலைமையில் வாழ்ந்து வழிகாட்டுகின்றார்கள்.

அப்படி என்றால் அதில் உள்ள ரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களும் மனிதர்கள் தாமே? அவர்கள் எப்படி இப்படி மாறினார்கள்? தேறினார்கள்? வாழ்க்கை உயரத்திற்கே ஏறினார்கள்?

அதுதான் முன்னேற்றத்தின் ரகசியம்.

“மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா போய்விடுவான்? கல்லினுள் தேரைக்கும், முட்டையில் கருவுக்கும் உணவு தருகிற ஆண்டவன், என்னைக் கைவிடவா போகிறான்?”

விதிதான் வாழ்வை வழி நடத்துகிறது. மதியால் என்ன முடியும்? எனக்கு இன்னும் வேளை வரவில்லை. எல்லாவற்றிற்கும் இறைவன் அருளிருந்தால் போதும்; கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கொட்டுவான்.

ஓர் அமைதியான மன நிலைக்காக உருவாக்கிச் சொன்ன வார்த்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையையே வடிவமைத்துக் கொள்ளும் மனிதர்கள் தாம், மேற்கூறியவாறு முணுமுணுத்துக் கொண்டு வாழ்ந்து செல்கின்றார்கள்.

இறைவன் எப்பொழுது உதவி செய்கிறான் என்றால், வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்பவர்களுக்குத்தான் என்கிறார் வள்ளுவர்.