பக்கம்:தாய்லாந்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனியார் துறைக்கு இன்னும் வேகமாகக் கதவுகளைத் திறந்து விட வேண்டும். அரசியல் வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஜாதிமத வேறுபாடுகளை, அரசியல் அநியாயத்தை அடியோடு விட்டு விட வேண்டும். இங்கு நான் எந்த இந்தியப் பிரமுகரைச் சந்திக்க நேர்ந்தாலும் இதைச் சற்று உரக்கவே சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார் மறைக்காடன்.

தாய்லாந்து மொழியில் கலந்துவிட்ட தமிழ், சமஸ்க்ருத சொற்களைப் பற்றி இவர் ஒரு குட்டி ஆய்வே நடத்தியிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

தாய்லாந்தில் மல்லிகைப் பூவுக்கு மல்லி என்றுதான் பெயராம். செண்பகப்பூ அங்கேயும் ஷெண்பகம் தானாம்!

தாய்லாந்து மக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். வாரத்தில் ஒருநாள் சாப்பாட்டை வீட்டுக்கு வெளியில் வைத்துக் கொள்வது என்பது இந்நாட்டு மக்களின் பழக்கம்.’தி வே டு வின் ஹார்ட் இஸ் த்ரூ ஸ்டமக்’ என்பது தாய் மக்களின் தத்துவம்” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.

இந்தியா பற்றி இவருடைய கணிப்பு ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.

“டாக்டர் மன்மோகன்சிங் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தனியார் துறையை ஊக்கப்படுத்தினால் வெளிநாட்டு மூலதனம் நம்மைத் தேடி வரும். தாய்லாந்தைப் பாருங்கள். இன்றைக்கு இந் நாட்டின் வளர்ச்சியைப் போல கிழக்கில் வேறெங்குமே இல்லை. ஜப்பானைச் சேர்ந்த பெரிய பெரிய தொழிலதிபர்களின் பார்வை இப்போது தாய்லாந்து மேல் விழுந்திருக்கிறது. இன்னும் பத்தே ஆண்டுகளில் தாய்லாந்தின் தொழில் முகம் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிடும். ஜப்பானுக்கே சவால் விட்டாலும் ஆச்சரியமில்லை.”

திருப்பாவையும், திருவெம்பாவையும் இங்கே நம் ஊர்போலவே ஓதுகிறார்கள். அப்படி ஓதுகிறவர்கள் தமிழகத்திலிருந்து வந்த பிராம்மணர்களாய்த்தான் இருக்க வேண்டும். அரச குடும்பத்தில் எந்த விசேஷம் நடந்தாலும் இவர்களுக்குத் தனி மரியாதை உண்டு. அரசர் பங்கேற்கும் விழாக்களில், அவர்

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/79&oldid=1075269" இலிருந்து மீள்விக்கப்பட்டது