பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நல்ல மனம் என்ற கிணற்றில், நல்ல தண்ணிர் என்ற நினைவுகள் ஊறிக் கொண்டேயிருக்கும்.

தீய நினைவுகள், தீய பழக்கங்கள் என்ற குப்பைகள் மனக் கிணற்றில் விழாமல் பார்த்துக் கொள்பவர்களுக்கு, ‘தாகம் தீர்க்கும்’ தூய தண்ணீர் கிடைப்பதுடன், ‘சுகம்’ கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது.

இதனால் தான் நல்ல உடல் - நல்ல மனம் - நல்ல வாழ்வு என்பதை வற்புறுத்தி எழுதிவருகிறேன்.

இப்படிப்பட்ட பண்பார்ந்த மனம், நல்ல வலிமையான உடல் செழிப்பினால்தான் வரும், வளரும்.

சோம்பேறித் தெரு நாய்கள், முயல்களை விரட்டத்தான் முடியும். வலிமையான வேட்டை நாய்களே, முயல்களை விரட்டிப் பிடிக்க முடியும் என்கிற பழமொழியை இங்கே நினைவு கூர்வோம்.

வலிமையான உடலில் விளையும் நலமான சிந்தனைகள், நல்ல செயல்களில் ஈடுபடும் பொழுதுதான், எதிர்பார்க்கும் இனிய பலன்களைக் கொடுக்கும்.

வேட்டை நாய்களைப் போல செயல்களில் ஈடுபட வேண்டும். விரட்டும் வேலை எளிது. பிடிக்கும் வேலையோ பெரிது. அதுபோலவே, செய்யும் தொழிலை செய்வது போன்ற ஆரவார பாவனையுடன் செய்வது எளிது. ஆனால் பலனும் குறைவுதான்.

அப்படிச் செய்வதை நம்மை நாமே குழியில் வீழ்த்திக் கொள்வது போலாகும். அவ்வாறு செய்வதைவிட்டு,