பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்


விரும்பினர். வயல் வரப்பில் நடந்தபோது, சேறுபட்டு விட்டதாம். அந்த, சேறு அவர்களுக்கு அன்றை தினம் அருவெறுப்பாக இருந்தது.

ஆற்றங்கரையில் படித்துறையில் இருவருமே நின்றனர், பேச்சு தொடங்கியது. பிரிப்பதற்கு முன், எத்தனை வைரக் கற்கள் இருக்கின்றன என்று எண்ணத் தொடங்கினான் ஒருவன். முத்தையா என்பது அவன் பெயர்.

வைரக் கற்கள் ஒற்றைப் படையிலான எண்ணிக்கையில் இருந்தன. பதின்மூன்று என்று முத்தையா எண்ணிச் சொன்னான்.

எப்படித்தான் பிரித்தாலும், மீதி ஒன்று வருமே! அந்த மீதியுள்ள வைரக்கல்லை யார் எடுத்துக் கொள்வது? ஏகாம்பரம் எதிர்க் கேள்வி போட்டான்.

பிரச்சினை அங்கு பெரிதாக எழுந்தது. வரவர பேச்சில் சூடேறியது.

‘நான் தான் அந்த துப்பாக்கிக்காரனை முதன் முதலாகப் பார்த்தேன். அதனால் எனக்குத்தான் மீதியுள்ள ஒரு வைரக்கல் சேர வேண்டும்! என்றான் ஏகாம்பரம்.

மரத்தில் இருந்து குதித்து, அவனை மிதித்துக் கட்டியவனே நான்தானே? அதனால் எனக்குத்தான் அதுசேர வேண்டும் என்றான்.