பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


இல்லை. உணர்வால் கூட மாற்றங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படக்கூடிய காரணங்கள் என்ன? இதற்கு ஒரு காரணத்தைக் கூறுகின்றார்கள் வல்லுநர்கள்.

இத்தகைய மாற்றங்களையும் ஏற்றங்களையும் நிகழ்த்துவன நமது உடலுக்குள் உள்ள சுரப்பிகள் (Glands) தான். இந்த சுரப்பிகள் என்பவை, இயற்கையாகவே, பல்வேறு சக்தி உள்ள அமிலங்களை உற்பத்தி செய்து, அதனை இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்கின்றன. இவ்வாறு செய்வதால், செல்கள் அமிலங்களைப் பெறுகின்றன. அதன் மூலமாக என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டுமோ அவற்றை முறையோடு செய்து வளர்க்கின்றன.

வியர்வைச் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள் போன்றவைகள் நீங்கள் அறிந்ததுதான். அது போலவே, ஜீரணத்திற்காக சுரக்கின்ற சுரப்பிகளும் உண்டு. இவைகள் நல்ல முறையில் செயல்படும் வரை, உடலில் வளர்ச்சியுண்டு, மலர்ச்சியுண்டு எழுச்சியுண்டு.

சுரப்பிகள் ஆற்றலில் குறையும் பொழுது, செயல்களில் தடுமாறும் போது, எல்லாம் தடை பட்டுப் போகின்றன. சுரப்பிகள் தான் உடலுறுப்புக்களைக் கட்டுப்படுத்துகின்றன. செயல்களில் இயங்க வைக்கின்றன. அவைகள் தான் இப்படி உடலில் மாற்றத்தையும் உண்டாக்குகின்றன. என்றால், ஏன் அப்படி?

இதற்கு பலர் கூறுகின்ற விடைகள் திருப்திகரமானதாக இல்லை. செல்கள்தான் மாற்றம் கொள்கின்றன என்றால், எப்படி என்பதாக யாரும் தெளிவான விளக்கம் தரவில்லை. ஆனால் நாம் இப்படி கூறலாம்.