பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---------- Σ' ι " "Ι - - - - - - - - - - - - - - - - - - இப்போது மீண்டும் ஒரு சந்தேகம், மாத்திரை என்றால் என்ன? அதன் நேரம் எவ்வளவு? இந்நேரம் வந்திருக்குமே சந்தேகம்! அதையும் தீர்த்துக் கொள்வோம். மாத்திரை என்பது ஒரு நேரக் கணக்கு. தமிழ்ப்பாட்டு ஒன்று கை நொடித்தலும் கண் இமைத்தலும் என்று மாத்திரை என்பதற்கான நேரக்கணக்கைக் கூறுகிறது. இந்த மாத்திரை விஷயத்தில் எல்லோருமே, தான் சொல்வது தான் சரி என்பதுபோல பல விளக்கங்களைக் கூறுகிறார்கள், வற்புறுத்துகிறார்கள். இவற்றையெல்லாம் தவறென்றும் சொல்லாமல் தள்ளியும் விடாமல், சரி என்றும் எடுத்துக் கொள்ளாமல் ஒரு சராசரி கணக்குக்கு வந்துவிடுவோம். ஒரு மாத்திரை என்பது 1/2 நொடியிலிருந்து 1 நொடி வரை என்று ஒரு முடிவுக்கு வந்து, காற்றைப் பிடிக்கும் கணக்கு நேரத்தைக் காண்போம். காற்றை உள்ளே இழுக்கும் பூரக நேரம் 16 x 1/2 = 8 நொடிகள். காற்றே உள்ளே இருத்திவைக்கும் கும்பகம் நேரம் 64 x % = 32 நொடிகள். காற்றை வெளியே விட இரேசக நேரம் 32 x % = 16 நொடிகள். 8 நொடி நேரம் மூச்சிழுப்பதா? இவ்வளவா இவ்வளவு தானா! 32 நொடிகளா? முடியுமா? முடியாதா என்று இந்த நேர அளவு பற்றி, இரண்டு தரத்தாரும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். அவர்களை மறந்து விடுவோம். - - ஆனால் ஒன்று, பிராணாயாமம் செய்ய விரும்புகின்ற தொட்க்க நிலையில் உள்ளவர்கள், மேற்கூறிய அளவு நேரத்திற்கு மூச்சுப் ஃெ -ெல (2ளை மொ கிலி ம் Iாக