பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பிண்டமாக விளங்கும் உடலின் சுவாசத்தால் (பிண்ட பிராணன்) அகிலாண்டமாக விளங்கும் ஆண்டவனுடன் ஒன்றாக கலக்கும் பெரு முயற்சி தான் பிராணாயாமம் ஆகும். இதையே ஆருயிர் என்றும் பேருயிர் என்றும் பேசுவர். ஆருயிர் என்றால் ஆன்மா (ஆத்மா) பேருயிர் என்றால் பரமான்மா (பரமாத்மா) என்று பெருமைப்படக்கூறுவர். ஆத்மாவை பரமாத்மாவுடன் ஐக்கியமாக்குகிற அருமையான முயற்சியே சுவாசமாகும். ஆக, எளிதாக காற்றை இழுத்து வெளியிட்டால் அதற்கு சுவாசம் என்று பெயர். இதை எல்லா உயிரினங்களுமே சாதாரணமாக செய்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த சுவாசத்தையே சுகம் என்று எண்ணி, முறையோடு, நெறியோடு முனைப்புடன் ஐம்புலன்களும் ஒன்றி செய்கிறபோது, அதற்கு பிராணாயாமம் என்று பெயர். இதை அறிவுள்ளவர்கள் செய்கின்றார்கள். அறிவு என்பதை தான் சித்து என்கிறார்கள். சித்து அதிகம் உள்ளவர்களையே, சித்தர்கள் என்றனர். சிந்தை தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று ஒரு பாடல் கூறும். அறிவைத் தேடுகின்றவர்கள் அறிஞர்கள் அறிவிலே தெளிவு பெற்றுத் தேர்ந்தவர்கள் தான் சித்தர்கள். சித்தர்கள் என்றால் சந்நியாசி என்று பலர், தவறாக நினைத்து பயப்படுகின்றார்கள். அது அப்படி அல்ல. உண்மையான உலக வாழ்க்கையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப உள்ளத்தை பக்குவப்படுத்திக்கொண்டு. உயர்ந்த வாழ்வு வாழ்வோரெல்லாம் சித்தர்கள்தான். அந்த பக்கு வநிலைக்கு எல்லோரும் வருவதற்கு முயற்சிப்பதுமில்லை. வரமுயல்வதுமில்லை. முயல்பவர்கள் அறிஞர்கள், அதில் வென்றவர்கள் சித்தர்கள். உடல் உறவு இன்பம் வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து, அதனால் ஏற்படுகிற உடல் மற்றும் பொருள் வறுமை, நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்று பல்லாற்றானும்