பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் என்று மட்டும் சொல்லவில்லை. பேரின்பம் என்று பெரிதாகவே இந்நூலில் பேசியிருக்கிறேன். அகத்தில், ஆத்மாவில் திருப்தி ஏற்பட வேண்டும் என்றால், என்ன செய்வது? எங்கே போவது? உடனே சாமியார்களிடம் சரணடைவது. ஜாதகம் பார்ப்பது. ஜோசியம் கேட்பது. இதனால் ஏற்பட்டு விடுமா ஆத்ம திருப்தி? அக மகிழ்ச்சி? பொல்லாத ஆசைகள் விரட்ட இல்லாத இடம் தேடித்தான் மக்கள் அலைகிறார்கள். மலைகிறார்கள், தொலைகிறார்கள். அந்த இன்பம். ஆனந்தம். அகமகிழ்ச்சி எங்கே இருக்கிறது? இந்தக் கேள்விக்கு நான் தருகிற பதில்தான் இது உங்கள் எதிர்காலம் உங்கள் கையிலே! உங்கள் புகழ் காலம் உங்கள் செயலிலே! எவரும் துணைக்கு வரமாட்டார்-உன் ஏழ்மையைப் போக்கவும் விடமாட்டார்/ என்றைக்கும் நீதான் துணை உனக்கு இதுதான் அனுபவக் கணக்கு என்ற என் கவிதை வரிகள், உங்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை. எனக்காக நானே எழுதிக் கொண்டது. இந்தக் கொள்கையுடன் வாழ்வதால் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம். நமது மகிழ்ச்சி நம்மிடம் தான் இருக்கிறது. வேறு எங்கும் இல்லை. நமது எதிர்காலம் நம்மால்தான் உருவாகிறது என்ற நயமான ஒரு எண்ணம். சிந்தையில் சுரந்து கொண்டே இருக்கிறது.