பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையூ என்ன குணாதிசயம் என்றால், முட்டையிலிருந்து வெளிவந்த உடனே பறக்கக்கூடிய ஆற்றல் என்பது தான். குழந்தைகளும் பிறந்த உடனே காற்றை உள்ளே இழுத்து விடுகின்ற சுவாசப் பணியை செய்வது, புள்ளினக் குஞ்சு பிறந்த உடனே பறப்பது என்பதற்கு உவமையாகக் கூறப்பட்டது. பறவை வேகத்தை விட மிகுந்த வேகம் கொண்டஉயிர்காற்றை குதிரைக்கு ஒப்பிட்டு இங்கே கூறியிருக்கிறார். திருமூலர் குதிரையானது அறிவும் சுறுசுறுப்பும் உள்ளது. கருத்தறிந்து நடப்பது மூக்கினால் மூச்சு விடுமாதலால் அது ஒடும்போது இளைக்காது என்று குதிரையின் இயல்பைக் கூறுவார்கள். பறவையைவிட வேகமாக ஒடும் குதிரை என்பதுபோல் அந்தக் காற்றின் இயல்புக்கான பலன்கள் மனிதர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது என்பதால், ஆற்றல் மிகு காற்றை அகத்தில் அடக்குகிற போது என்ற நுண்மையை, அதிசய உண்மையை இங்கே உணர்ந்து கொள்கிறோம். கள் என்பது வெறியை உண்டாக்கக் கூடிய ஒரு விதபானம் சோர்வையும், சுகக் கேட்டையும் விளைவிக்கக் கூடிய வெறியூட்டும் ஒரு தேறல், பொய், களவு, திருட்டு, கொலை போன்ற மோகனங்களை ஏற்படுத்தும் மாய்மால சக்தி. புறத்தே உண்டாக்கக் கூடிய வேகத்தையும் அகத்தே ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும் கள் உண்டாக்குகிறது. அதை உண்டவர்க்கு களி உண்டாகிறது என்பார்கள். களி என்றால் சிற்றின்பம். அற்ப இன்பம் என்றும் கூறலாம் அதாவது கள் உண்பவர்க்கு வரும் மகிழ்ச்சி. இப்படித் தான்