பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 83 = செம்மையான சுவாசப் பயிற்சி, இயற்கையான உறுப்புக்களின் உழைப்பை, உற்சாகப்படுத்தி விடுவதால், உள்ளே இருக்கின்ற சுரப்பிகளும், தங்களுக்குரிய சுரப்புக்களை, சுகமாகப் பெய்து விடுகின்றன. இதனால் தான், பயிற்சி செய்பவர்கள், வயது அதிகமானாலும் கூட தளர்ச்சி அடையாமல் வாழ்கின்றனர். அவர்களுக்கு நரையும் வருவதில்லை. திரையும் வருவதில்லை. நரை என்பது தலையில் ஏற்படுகின்ற முடியின் வண்ணமாற்றமாகும். உடலில் மேற்புறத்தில் இருக்கும் முடிகள் வெண்மை நிறம் அடைவதைத்தான் நரையென்றும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையே திரை என்றும் கூறுகின்றனர். மனிதர்க்கு ஏற்படுத்துகின்ற கவலைகள், சுரப்பிகளின் சுதந்திரமான சுகமான உற்பத்தியைத் தடுத்து விடுவதால் தொலைத்து விடுவதால்தான், உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. - சுவாசப் பயிற்சி நன்கு சரியாக இருக்கிறபோது உறுப்புக்கள் தங்கள் தரத்தையும் திறத்தையும் உடனே இழந்து விடுவதில்லை. அதனால்தான். ரோமம் வெளுக்காமல் கறுப்பாக இருக்கிறது என்று. பார்வைக்குத் தெரிகின்ற ஒன்றைப் பற்றி பக்குவமாக விளக்கிக் காட்டுகிறது. பிசிராந்தையார் தன் முடி நரைக்காமல் இருப்பதற்கு தனக்கு கவலைகள் கிடையாது என்று கூறிய விளக்கத்தை இங்கு நாம் நினைத்துப் பார்க்கல.ம. சுவாசப் பயிற்சியானது மனதைக் கட்டுப்பாட்டிற்குள்ளே கொண்டு வந்து விடுகிறது. எதற்கும் கவலைப்படாத தெளிவினைத் தந்து விடுகிறது. நல்ல வாழ்க்கையை வாழச் செய்து விடுகிறது.