பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் என்றால் நல்லதை சிந்திப்பது என்று அர்த்தம். அந்த மனத்தின் ஆட்சியில்தான், சுவாசம், சுதந்திரமாகச் செயல்படுகிறது. அதனை அருமையாக ஆற்றலுடன் அளவாக திறமாக செய்ய வேண்டும் என்பதுதான் இயற்கையின் ஏக்கம். அதைச் செய்ய வேண்டும். சிறப்பு பெற வேண்டும். செழிப்பு பெற வேண்டும் என்று கொஞ்சம் லியுறுத்திச் கின்றார்கள். அதன்படிநாம் வாழ முயற்சிக்க வேண் 7 நமது மனம் மிகவும் நல்லவன். நமது உடலுக்குள்ளே இரண்டுவிதமான குதிரைகள் மனதால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு குதிரைகள் என்பது இரண்டுவிதமான சுவாச உயிர்ப்பு. ஒன்று மூக்கின் வலதுபுறமாக இழுப்பது. இதற்கு பிங்கலை என்று பெயர். மற்றொன்று இடதுபுறமாக இழுப்பது. இதற்கு இடகலை என்று பெயர். ஆக, நாம் மூச்சை உள்ளே இழுத்தும் மூச்சை வெளியே விட்டும் என, இந்த இரண்டு விதமான செய்கைகளில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றைச் சிறிது நேரம் உள்ளே இருத்தி வைக்கின்ற உபாயத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். உள்ளே காற்றை இருத்தி வைப்பதற்கு கும்பகம் என்று பெயர். - இந்தப் பாடலைப் படியுங்கள். சூரியன் நல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகு அறிவாரில்லை (547) சூரியன் என்றால் பெருமைமிக்க மனம், குதிரை என்பது உயிர்ப்புத்தன்மை. விரகு என்பது உபாயம். இவ்வாறு மனம் போனபடி சுவாசிக்காமல் மனத்தின் உரிய கட்டளைக்கு இணங்க, கட்டுப்பாட்டுக்கு ஏற்ப, நாம் சுவாசித்து வந்தால், சுகமெல்லாம் பரவி, தேகம் எல்லாம் திறமைகள் நிலவி, சிறப்புமிக்க பிறப்பும் இறவாமல், தினம் சிறந்து கொண்டிருக்கும். நமது வாழ்க்கையும் வளமாக தொடர்ந்து கொண்டிருக்கும். இத்தகைய வாழ்வு பெறும் வகையினை மேலும் தொடர்ந்து