பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

τΤι 11-با آن آسیااآ -ا U I UJI LJ a дрчалу " ё, MLJI ILI LILI U ILI I LILI LLJI I பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சி நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல சாதாரண விஷயம் அல்ல. ஒரு சிங்கத்தை அல்லது ஒரு யானையை வலிமை பெறத் தூண்டிவிட்டுப் பயிற்சி கொடுப்பது போலத் தான் இந்தப் பிராணாயாமப் பயிற்சியும். சிங்கத்துடன் அல்லது யானையுடன் பழகுகின்ற ஒருவன், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவன் கொஞ்சம் அஜாக்ரதையாக இருந்தாலும், ஆற்றல் மிகுந்த மிருகம் அவனையே அழித்து விடும், யானை அறிந்தறிந்து பாகனையே கொல்லும் என்பது பழமொழி. பேரின்பம் தருகிற பிராணாயாமத்தை கண்டபடி செய்தால், பயிற்சியைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணிக் கொண்டு பழகினால், நம்மை என்ன செய்துவிடும் என்ற முரட்டுப் பிடிவாதத்துடன் முயற்சித்தால், முடிவு சிக்கலாகி விடும் என்பதை நான் முன்கூட்டியே உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். ஏனென்றால் இந்த பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியானது, இதயம், நுரையீரல், கல்லீரல், வயிறு மற்றும் குடற்பகுதிகளை மட்டுமல்ல, தசைகள், நரம்புகள், மூளைப்பகுதி, நிணநீர் மண்டலங்கள் மற்றும் இரத்தக் குழாய்கள் போன்ற எல்லாப் பகுதிகளையும் ஈடுபடுத்தி, உச்ச நிலை உழைப்புக்கு உயர்த்தி விடுகிற ஆற்றல் கொண்டதாகும். நீங்கள் செய்வது தவறான பயிற்சி என்றால் நிச்சயம் அது உங்கள் உடம்பை பாதிக்கும் என்பதை இதனால் அறிந்து கொள்ளவும். ஆகவே, உங்கள் சக்தி என்ன? உடல் நிலையின் தரம் என்ன? திறம் எவ்வளவு என்பதற்கேற்பத்தான் பிராணாயாமம் செய்ய வேண்டும். 1 : 4 2 என்ற அந்தக் கணக்கை 1 : 2 : 1 என்ற வைத்து தொடக்க நிலையில் ஆரம்பிப்பது புத்திசாலித் தனமாகும்.