பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"─一 — 2. மேருவினும் மிகப் பெரிய வடிவுற்று நிற்றல் = மகிமா. இதுதான் மிகப்பெரிய = பெருமைக்குரிய வடிவம். இந்நிலையையும் ஓராண்டுப் பயிற்சிக்குள் பெற முடியும். 3. சேறு, தண்ணிர் முதலியவற்றில் இயங்கிடினும், அதனுள் அழுந்திப் போகாது, அவற்றின் மீது நடந்து, காற்றினும் வேகமாக நடந்து போகிற மெல்லிய வடிவுற்று நிற்றல் = இலகிமா, இதை ஐந்தாண்டுப் பயிற்சியால் பெறலாம். மேலே கூறிய மூன்றும் உடம்பினுள் எய்துகின்ற, பெறமுடிகிற பயன்கள் அடுத்து வருகின்ற ஐந்தும், மனத்தால் பெறும் மாட்சிகள். 4. புலன்களை நுகர்ந்தும், அவற்றில் தொடக்குண்ணாமை, அதாவது யோகப் பயிற்சியில் காணப்படும். மின்னல் போலும் ஒளி. இவ்வொளியின் மூலம், இருந்த இடத்திலிருந்தே உலகப் பரப்பு முழுவதையும் ஒருங்கு காணலாம். இதையே கரிமா என்பார்கள். 5. மனத்தால் விழையப்பட்டன. அனைத்தையுமே தாம் விழைந்தவாறு,பெறுதல் = பிராத்தி. 6. பிரகாமியம் என்று ஒரு சித்தி. இதற்கு நிறைவுண்மை என்று பெயர். எண்ண மாத்திரையான் ஆயிரம் மகளிரைப் படைத்து அனைவரோடும் ஆயிரம் வடிவாய் நின்று, விளையாடலுக்கு பிரகாமியம் என்று பெயர். 7. ஆட்சியனாதல் என்பதற்கு ஈசத்துவம் என்று பெயர். படைத்தல், காத்தல், துடைத்தல்களாகிய உடம்பின் கண் செய்யப்படும் முத்தொழில்களையும் எளிதாக இயற்றும் வலிமை பெறுவதற்கே ஈசத்துவம் என்று பெயர். இப்பயிற்சி செய்தால் முழு முதற்கடவுளையும் கண்டு வழிபடுதலும் கூடும். 8. கவர்ச்சி என்பதற்கு வசித்துவம் என்று பெயர். உலகளாவிய ஆற்றலாகும். எல்லா உலகுக்கும் எளிதாகப் போய் வருகிற பேராற்றலையே வசித்துவம் என்பார்கள்.