பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 3. உனக்குள்ளே ஒரு சக்தி வாழ்க்கை என்பது, நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வெறுத்தாலும், மறுத்தாலும், நம்மைவிட்டு விலகிப்போகாத ஒன்று. நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும், வாழ்ந்தே தீரவேண்டும், இதுகாலத்தின் கட்டாயம் மனிதர்களின் மகோன்னத கடமையும் ஆகும். ஆக, நம் வாழ்க்கையின் வடிவம் என்ன? வனப்பு என்ன? கோலம் என்ன? கொள்கை என்ன? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான ஐஸ்கிரீம் ஒரு சிறுவன், தன் கையில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை வைத்துக்கொண்டிருக்கிறான். அப்பா, அம்மாவிடம் அடம்பிடித்து, தொந்தரவு தந்து, மிகவும் கஷ்டப்பட்டு, அந்த ஐஸ்கிரீமை வாங்கிவிட்டான். அதை அவன் சாப்பிடாமல், அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். மற்றவர்கள் தன்னை எப்படி பார்க்கிறார்கள் என்று தன்னைத்தானே வியந்து கொண்டிருக்கிறான். நேரம் ஆகிக்கொண்டிருந்ததை அவன் நினைக்கவும் இல்லை. ஐஸ்கிரீம் ருசியை அவன் ருசிக்கவும் இல்லை. நேரத்தைக் கடத்திவிட்டு, ருசிக்கத் தொடங்குமுன் பார்க்கிறான். அந்தக்குப்பியிலே ஐஸ் கிரீம் இல்லை எல்லாம் கரைந்தோடிவிட்டது. ஏமாற்றத்துடன் அழுகிறான்.