பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'பிறரைக் குழப்பிவிடு. நீ பெரிய மனிதனாகி விடுவாய்' என்பது ஒரு பழமொழி. பிறரைக் குழப்பிப் குழப்பி, தன்னைப் பெரிய ஞானவானாக்கிக் கொண்டும், தங்களைப் பெரிய ஞானி என்று பறை சாற்றிக் கொண்டும் உட் கார்ந்த இடத்திலிருந்தே அவர்கள் வாழ்க்கை நடக்கிறது. உட்கார்ந்த இடமே ஒய்வு இடமாக மாறி ஒழிந்து போய்விடுகிறார்கள். ஆகவே, அறிவாளிகளின் பலம் இந்த அகிலத்து மக்களுக்கு உதவ மாட்டேன் என்கிறது. 2. உடல்பலம் உடையவர்கள்: இவர்கள் வாழ்க்கையை நன்கு அனுபவிக்கிறார்கள். உடலிலே பலம் இருக்கிறது. கர்ம வீரர், என்று போற்றப் படுகிறார்கள். அவர்களுக்கு உடல் பலத்துக்காகவே தனி கவனமும், சிறப்பு மரியாதை எல்லாம் கிடைக்கிறது. அறிவாளிகளுக்கு ஞானத்தீ ஏற்பட்டு எப்படி மதமதர்ப்பு உண்டாகி, அறிவின் மேன்மையை இழக்கிறதோ அதுபோலவே உடல் பலம் உள்ளவர் களுக்கு மதத்திமிர் ஏற்பட்டு, தங்கள் பண்பான பதவியை விட்டு விலக ஆரம்பிக்கிறார்கள். பேடிகள் சூட்டுகின்ற புகழாரத்தால் இவர்கள் தலை கனத்துப்போவதால், சிறிய காரியங்களும் சிதறிப்போய், இவன் மரியாதை இழக்க ஆரம்பிக்கிறான். ஒருவனது உடல் பலம், பிறருக்குப் போய்சேர்வதற்கு உள்ளேயே பலம் அழியத் தொடங்குகிறது. இதனால் உடல் பலம்