பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'காசில் லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி' என்று கோலாகலமாகக் கொம்பேறி மூக்கன் போலிருந்து பாடுகிறார்கள். இந்த சமுதாயம் பணத்தை அடிப்படையாகவும், ஆதாரமாகவும் வைத்துத் தான் பழக்கப்பட்டிருக்கிறது. அந்த வரைமுறைகளைத் தான் பின்பற்றிச் கொண்டு வருகிறது. தீயவன், கொடியவன் அயோக்கியன், கொலை காரன், என்று எவரையும் சமுதாயம் புறம் ஒதுக்குகிறது. ஏனென்றால் பணம் அவர்களிடம் நிறைய இருக்கிறது. பணம் இருப்பவர்கள்தான் தலைவர்கள். மக்களுக்கு வழி காட்டிகள். அவர்கள் எவ்வளவு பயங்கரமான ஆட்களாக இருந்தாலும், அவர்கள் பிறவி மேதைகள் என்று போற்றி, தலைமேல் தாங்கி தாள்பணிந்து கிடக்கிற தத்தேரிகளாகத் திரிகிறார்கள். எவ்வளவுதான் புகழும், பொருளும் வீட்டு வசதி களும், சொத்துக்களும் இருந்தாலும் அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும், கடுமையான நோய்க்கு ஆளாகியிருந்தாலும், பணக்காரர்களுக்கு வருகிற நோயைப் பற்றிப் பொது மக்கள் கவலைப் படுவதில்லை. அவர்கள் வீசுகிற பணத்துக்காக ஆல வட்டம் போட்டு, அவரே தலைவர் என்று பாடுவார்களே தவிர, அவர்களுக்கு மனித நலம் பற்றிய சொரணையே கிடையாது. மனிதனுடைய பிறப்பு மட்டுமல்ல, பெறுகின்ற சிறப்புப் பேறுகளும் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு ரோஜாப்பூ இருக்கிறது. அந்த ரோஜாப் பூவிலிருந்து இதழ்கள் ஒன்று ஒன்றாக விழுந்து