பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இவ்வாறு, அரிய பயிற்சியை அளவோடு தரமாகச் செய்யும்போது உடலும், உறுப்பம், நரம்பும், தசையும் வலிமை பெறும்போது விந்து நீற்றுப் போவதற்கோ, வீரியம் கெட்டுப் போவதற்கோ, அலித் தன்மை ஏற்படுவதற்கோ எப்படி சூழ்நிலை அமைகிறது? என்பதுதான் கேட்க வேடிக்கையாக இருக்கிறது. உடல் பயிற்சியால், இரத்த ஓட்டத்தால் உடல் சூடேறுகிறது என்றால், அது பதமான சூடுதான். அது உறுப்புக்களைப் பண்படுத்தும் சூடல்ல. பயிற்சியை வெறியோடு செய்தால், செய்யத்தகாத முறையில் செய்தால் இரத்தமும் அதிகமாக சூடேறும். அது உண்மையான பயிற்சி அல்லவே! முரட்டுத் தனமும், முட்டாள் தனமும் வெறித்தனமும் வீறிட்டு கிளம்பும் சாதன முறையும் உடற்பயிற்சிக்கு அப்பாற்பட்ட செயல்களாகும்.

உடற்பயிற்சியால் பெற்ற அழகான உடலைக் காத்துக் கொள்கின்ற ஆர்வத்தால் எழுகின்ற மனக் கட்டுப்பாட்டின் காரணமாக, பயிற்சியாளர்கள் உடல் உறவில் சிக்கனமாகவும் மிதமாகவும் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு அவர்களை 'அலிகள்' என மதிப்பிடுவது பொருந்தாத கூற்றல்லவா! பயிற்சி செய்பவர்களுக்குக் குழந்தை செல்வம் அதிகம் என்பது உலகம் அறிந்த உண்மையாயிற்றே!

ஆகவே, மனக் கட்டுப்பாட்டிற்கு வேறு பெயர் அலித் தன்மை அல்ல. உரமான உடலில் உணர்ச்சிப் போர்தான் மூளுமே தவிர, உணர்ச்சிகள் குன்ற வழியே கிடையாது என்பது தான் உண்மை. இயற்கை நீதியுங்கூட.

இறுதியாக, பயிற்சி செய்பவர்கள் விரைவில் மாண்டு போகின்றார்கள், நோய்வாய்ப்படுகின்றார்கள் என்பது ஒரு வாதம். அது பயிற்சியாளர்கள் புரிகின்ற குற்றமே தவிர, பயிற்சியின் தூண்டல் அல்ல. பயிற்சியால் பண்பட்ட உடலைப் பெற்றவர்கள், தன்னை யாராலும் எதுவுமே செய்து