பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 3. LSlsmmrälsit smö Gasmu9lser (Flankers Koen) வாலிப வயதில் வளமோடு இருப்பவர்களே, பந்தயத்தில் பங்கேற்று வெற்றிபெற முடியாத நிலையில் இருக்கிறபோது. 18 - வயது வீர இளைஞன் ஜெஸி ஓவன்ஸ் 4 தங்கப்பதக்கங்களை வென்றதுபோல், ஒரு பெண் வென்று இருக்கிறாள் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. அதிலும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண் எப்படி ஒலிம்பிக் சாதனை படைத்துநான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்தது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இருக்கிற மலையைப் பெயர்த்து இடம் மாற்றி வைத்ததுபோல் இருக்கிறதல்லவா! கன்னியாக இருந்த பொழுது ஒலிம்பிக் பந்தயத்தில் பங்குபெற முடியாத ஒரு காலகட்டம். கல்யாணம் நடந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் நடந்துவிட்ட கல்யாணம். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபிறகு ஏற்பட்ட மன எழுச்சி. அதனால் அவர் பங்கு பெற்று இந்த உலகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டார். தான் பங்கு பெற்ற நான்கு போட்டிகளிலும் உலக சாதனை படைத்தார். நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். பிளாங்களில் கோயின். வெற்றிப் பதக்கங்களை பெற்றுக் கொண்டு ஒரு கோச் வண்டியில் வீடு திரும்பும் போது, அந்த நாட்டு மகாராணி ஊரின் எல்லைக்கு வந்து வரவேற்றுப் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார் என்றால், இவர் புகழ் பெரிது. வானிலும் பெரிது. வீரப் பெண்மணி என்ற வெற்றிப் பெயரைத் தன் பெயரில் பதித்துக் கொண்டது