பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து தில் துணிந்து செல் 41 ஆறாவது அறிவு இருக்கிறது. பக்குவமான பகுத்தறிவும் இருக்கிறது. நம்மைச்சுற்றி நடப்பதற்கேற்ற அனுசரிக்கும் குணம் இருக்கிறது. جالا لا إى செய்பவர்களை மக்கள் என்பார்கள். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சாமர்த்தியமாகப் பேசுவது, புத்திசாலித் தனமாக நடந்துகொள்வது, மற்றவர்களைக் கவரும்படி சொற்பொழிவாற்றுவது; நல்ல கருத்துக்களை மக்களுக்குச் சொல்வது போன்ற குணம் உள்ளவர்களை அறிவாளி என்பார்கள். இப்படி மக்கள் மனதிலே இடம் பிடித்துக் கொள்பவர்களை, அந்நாளில் அமரர் என்றனர். இன்றோ, இறந்துபோனவர்களைக் குறிக்கின்ற சொல்லாக அமரர் என்பது பாழாய் போயிருக்கிறது. மக்கள் மனதிலே, அமர்ந்துகொண்டு விட்டால் போதாது, அவர்கள் போற்றி வணங்கி, பின்பற்றி, பூசைகள் செய்வதுபோல, பல விசேஷ காரியங்களைச் செய்ய வைப்பதுமான பெருமையைத்தான் தேவர் என்றனர். 'தேவர் என்ற சொல்லுக்கு 'தெய்வம் போன்றவர். தேவன் போன்றவர் என்பது வழக்காகும். இந்த நிலையை அடையத்தான், மக்கள் முன்னோக்கிப் பார்க்க வேண்டும், முன்னேற்றமும் பெற வேண்டும் என்றென்றும் முயலவேண்டும் என்கிறோம்.