பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நமக்கு முன்னே வரலாறு படைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தப் பெண்ணை மனங்குளிர வாழ்த்துவோம். துருவ நட்சத்திரம் போலத் துள்ளியமாகத் தெரிந்த இந்தப் பெண்ணின் வரலாற்றை மீண்டும் படிப்போம். 2. ஜெஸி ஓவன்ஸ்: அமெரிக்காவிலே இந்த இளைஞனும் ஒரு நீக்ரோ சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான். இந்த ஏழை இளைஞனுக்கு உதவிடுவார் யாருமில்லை. இரவிலே ஒரு வாட்ச்மேன் வேலை உண்பதற்கு உணவு இல்லாவிட்டாலும், அவனுக்கு அங்கு சாப்பிட உருளைக் கிழங்கு தோல் இருந்தது. அந்தத் தோலை உண்டு உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தான். இரவு முழுவதும் காவலர் வேலை. பகலில் ஓய்வு நேரத்தில் விளையாட்டுப் பயிற்சி. 1936-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் அமெரிக்காவின் சார்பில் பங்கு பெற்று இருந்தான். அப்பொழுது கொடுங்கோல் மன்னனாக விளங்கிய ஹிட்லர், ஜெர்மனியை ஆண்டு கொண்டு இருந்தகாலம். எல்லா இனத்தையும் விட, ஆரிய இனமே வெற்றியினம் என்று அவன் முடிவு கட்டிக் கொண்டிருந்த காலமது. * அந்த நகருக்குப் போய் ஒலிம்பிக் பந்தயப் போட்டியில் கலந்து கொண்ட அந்த வீரன், 100 - மீட்டர் ஓட்டத்திலே தங்கப்பதக்கம் வென்றான். 200 - மீட்டர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றான். இந்த இரண்டு