பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 69 நாம் துணிவாக ஒரு காரியத்தை மேற்கொள்கிற பொழுது, உண்டாகின்ற விளைவுகள், அதாவது சாதகமான விளைவுகள் உடனே ஏற்படாமலும், நாம் சகித்துக் கொள்ள முடியாத பாதகமான முடிவுகள் உடனேயும் உண்டாகும். அப்பொழுது எண்ணத்திலே புண்ணாகும் பொழுதுதான் எல்லா முயற்சிகளும் மண்ணாகிப் போகிறது. நான் முதன் முதலாகச் சென்னைக்கு வந்த பொழுது, ஒரு பள்ளிக் கூடத்தில் சம்பளம் இருநூறு ரூபாய். என் மனைவி நான்கு குழந்தைகள், என்னைச் சேர்த்து ஆறுபேர். வீட்டுவாடகையே நூறு ரூபாய் இருக்கும் பொழுது, மீதிச் செலவிற்கு என்ன செய்வீர்கள் என்று விபரம் தெரிந்தவர்கள் எல்லோரும் கேட்டார்கள். ஏன் வாழ முடியாது என்றேன். காலையிலே ஏழு முதல் எட்டு மணிவரை ஒரு டியூசன். 8 முதல் 9 வரை ஒரு டியூசன். பிறகு பள்ளிக்கூடம். மாலை 4 முதல் 5 மணி வரை ஒரு டியூசன். ஐந்து முதல் ஆறுமணிவரை ஒரு டியூசன். ஒவ்வொரு டியூசனுக்கும் நூறு ரூபாய். ஆகவே நானூறு ரூபாய் கூடுதலாகச் சம்பாதித்தேன். எனக்குத் தெரிந்தது டியூசன் தொழில். அதை வைத்துக் கொண்டு ஆனந்தமாக இல்வாழ்க்கை நடத்தினேன். அடுத்து நான் மேற்கொண்ட முயற்சியிலே பாதகமான விளைவுகள். பத்திரிக்கை நடத்திய சில நண்பர்கள் எனக்குப் பயங்கரமாகத் துரோகம் இழைத்து மனதைப் புண்படுத்தியதால், பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. 'அதிசயம் என்று அந்தப் பத்திரிக்கையின் பெயர். ஆரம்பித்த எட்டு மாதத்திற்குள்,