பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 85 போட்டிகளிலும் அவன் உலக சாதனை படைத்தான். மூன்றாவது போட்டியான நீளம் தாண்டும்போட்டியிலும், உலக சாதனைபடைத்து முதலாவதாக வந்தான். அவனுக்குத் தங்கப் பதக்கம் அணிவிக்க மறுத்து, மேடையை விட்டே ஓடிவிட்டான் ஹிட்லர். அந்த மாவீரன் ஹிட்லரை, மேடையை விட்டே விரட்டி ஒரு புரட்சியையே செய்து விட்டான். 400 - மீட்டர் தொடர் ஓட்டத்திலும் உலக சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றான், நாட்டிலே, வேலை தர ஆளில்லை என்றாலும், உணவு தர யாருமில்லை என்றாலும், தன் மீது வைத்திருந்த நம்பிக்கையிலே வலிமையை வளர்த்துக் கொண்டு தன் தாய் நாட்டிற்காக நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று சரித்திரமே படைத்த அந்த மாவிரனின் புகழ் ஒலிம்பிக் பந்தயம் இந்த உலகத்தில் வாழும் வரை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். தனக்கு உதவி செய்ய வில்லையே என்று அவன் ஒரு பொழுதும் வருந்தியது கிடையாது. தன் வலிமைக்கு ஒரு நாள் வாய்ப்புக் கிடைக்கும் என்று வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தான் வாய்ப்பும் வந்தது. வெற்றியை நாட்டினான் - வெளிச்சத்திற்கு வந்தான். இவன் வெற்றியைப் பார்த்த மக்கள், பேருக்குப் பெருமைப் பட்டாலும் உள்ளுக்குள்ளே புழுங்கிச் செத்தார்கள். ஆக, நமது நாட்டிலே வாழும் நூறுகோடி மக்களுள் யாராவது ஜெஸி ஓவன் எல் தோன்றுவாரா என்று 1936ஆம் ஆண்டு முதல் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.