பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா விரும்புகிறேன். பல நாட்களாக காத்திருக்கிறேன்; இன்று ஒரு நாள் போய்விட்டதே! இன்னொரு நாளும் பலனின்றிப் போய்விட்டதே! என் வாழ்நாளில் ஒருநாள் வீணாகிவிட்டதே குறுகிய ஜீவிதத்தில் ஒரு நாள் வீணாகிவிட்டதே! உன்னை எப்பொழுது பார்ப்பேன். நீ என்ன உண்மையான கடவுள்தானா! உன்னைப் பார்க்காத ஒவ்வொரு நாளும். வீணான நாள்தானே!" என்று கதறிக் கதறி அழுதார். பலன்! ஒரு நாள் அவர் கடவுளைப் பார்த்தார். பார்த்தேவிட்டார்!’ இப்படித்தான் ராமகிருஷ னரின் வரலாறு விரித்துரைக்கிறது. ஒவ்வொரு நாளையும் கடவுள் தந்த நாளாக அவர் பாவித்தார். பயன்படுத்தினார். கடவுளையே தரிசனம் கண்டு, விரும்பியதைப் பெற்றார். அதனால்தான், ஒவ்வொரு நாளையும், நாம் கடவுள் கொடுத்த பரிசாகக் கொள்ள வேண்டும். இப்பொழுது வாழ்கிற, இன்றைக்கு வாழ்கிற வாழ்க்கைதான் நிஜமானது. இன்று மாலைப்பொழுது இருப்போமா? இரவு உறங்கப்போய் விழிப்போமா? மறுநாள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோமா! இப்படி நம்பிக்கையில்லாத நிலையில்தான் நம் வாழ்வு நடமாடுகிறது. - அதனால்தான், ஒவ்வொரு நாளையும் உன்னத நாளாக எண்ணி, நாம் உழைக்க வேண்டும், சுகிக்க வேண்டும். சாதிக்க முயல வேண்டும். சந்தோஷமாக்கிக்