பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮO ; டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதுபோல்தான் உலகமும், உலக மக்களும், நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, எதுவாய் இருக்கின்றீர்களோ, அப்படி இருக்கிறது. நீங்கள் வாழவேண்டும், வாழ்ந்தாகவேண்டும், முன்னேறவேண்டும், முதல் ஆளாய்திகழ வேண்டும் என்றால், நீங்கள் கண்ணாடியில் அழகு பார்ப்பதுபோல, அனைவரிடமும் இருந்தாகவேண்டும். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நீங்கள் உங்கள் குறைகளை கோபங்களை உள்மனத்துக்குள் போட்டு விழுங்கிக்கொண்டு நிர்மலமாக முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நடந்ததை, உங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மறந்ததுபோல் நடித்துக்கொண்டு, சாந்தமாகத் தோன்ற வேண்டும். - முடியக் கூடிய காரியமா என்கிறீர்களா? குளிரானாலும் வெப்பமானாலும் வெளியேவிடாமல், தன்னகத்தே வைத்துக்காத்துக் கொண்டிருக்கிற தர்மாஸ் பிளாஸ்குபோல, நீங்கள் உங்களை நெகிழ்ச்சி அடைந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிறர் போற்றுகின்ற பெருமையைப் பெற வேண்டுமானால், சாதாரண மனிதர்கள் செய்கின்ற சில காரியங்களை, நீங்கள் தியாகம் செய்துவிடத்தான் வேண்டும். தியாகம் என்றால் அவற்றைத் தீண்டாமல் இருப்பதுதான். வித்தியாசமான சில குணநலன்களை சில கொள்கைகளை, சில நடைமுறைகளைக் கொண்டிருந்த மனிதர்கள்தாம், மற்றவர்களைவிட மேம்பட்டிருக்கின்றார்கள்.