பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கின்ற மேசைப் பந்தாட்டம், தரைமேல் ஆடுகின்ற துள்ளடிப், பந்தாட்டம் தோன்றின (டென்னிஸ்).

இவ்வாறு பந்தின் செய்வகைகள் பெருகியது போலவே. விளையாட்டுக்களும் வகைவகையாக வளர்ந்துகொண்டே, போயின. மனிதன் வசதியையும், வாய்ப்பையும், தேவையையும் பார்த்துப் பார்த்து விளையாட்டின் குறிக்கோளையும் புதிய புதிய பாணியில் தோற்றுவித்தான்.

பொழுது போக்குவதற்காகத்தான் விளையாட்டுக்கள் என்ருலும், மனதுக்கு இன்பம் விளைவிக்கவும், மனித சக்தியை மிகுதிப்படுத்திக் கொள்ளவும். மனித செயல் திறன் நுணுக்கத்தை விரிவுப்படுத்திக் கொள்ளவும் என்பதற்காகவே. விளையாட்டுக்கள் பிற்காலத்தில் பணிபுரியத் தொடங்கின. அந்த அடிப்படையிலே தான் ஆட்டத்தின் நோக்கங்களும் மாறின. அவ்வாறு மாறிப் பிரிந்த ஆட்டங்களை நான்கு வகை யாக நாம் பிரிக்கலாம்.

1. இலக்கு விளையாட்டுக்கள் :- இலக்கு என்ற ஒன்று ஆடுகளத்தின் இருபுறமும் இருக்கும்... எதிரெதிராக நின்று இரு குழுக்கள் ஆடும். பந்தை உதைத்தோ, அடித்தோ, தள்ளியோ, தட்டிக்கொண்டோ எதிர்க்குழு காத்துக் கொண்டிருக்கும் இலக்கினுள்ளே பந்தை செலுத்த ஒரு குழு தாக்கும். இன்னெரு குழு தடுக்கும், இவ்வாறு பந்தைச் செலுத்த தாக்கியும். தடுத்தும், முற்றுகையிட்டும், முழக்கியும் வெற்றி காண விழைகின்ற ஆட்டங்களே ‘இலக்கு விளையாட்டுக்கள்’ என்று அழைக்கப்பெறுகின்றன.

இவ்வாறு, 24 அடி அகலமுள்ள குறுக்குக் கம்பத்தாலும் 8 அடி உயரம் உள்ள இரு கம்பங்களுக்கிடையே அமைந்த. பரப்பளவை, பக்கத்துக்கு ஒரு இலக்காகப் பெற்று கால் பந்தாட்டம் ஆடப் பெறுகிறது.

12 அடி அகலமும், 7 அடி உயரமும் உள்ள மூன்று. கம்பங்களால் அமைக்கப்பெற்ற இலக்கினைப் பெற்று