பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. உணவு உண்ணும்
ஒழுங்கு முறை


உணவுதான் உடலுக்கு அமைப்பையும், பலத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கிறது. உடலுக்கு உயிர் மூச்சாகக் காற்று விளங்குவதுபோல, உடலுக்கு நலவீச்சாக உணவு அமைந்திருக்கிறது.

நாம் உணவைச் சாப்பாடு என்கிறோம். சாதம் என்கிறோம். உணவு என்கிறோம். உண்ணும் பண்டம் என்கிறோம்.

சாப்பாடு என்றால் மரண அடி என்று அர்த்தம். ஒருவர் சாப்பிடுகிறார் என்றால் மரணத்துக்கு அவர் வேகமாக நடைபோடுகிறார் என்று அர்த்தம். 'சா' என்றால் சாவு என்றும் , 'பாடு' என்றால் அவஸ்தையென்றும் அர்த்தம். இந்தச் சாப்பாடு என்ற சொல்லே, சாப்பிடுவதற்கு எச்சரிக்கை விடுக்கின்ற சொல்லாக அமைந்திருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும், அளவோடு சாப்பிடுங்கள், அளவோடு சாப்பிடுங்கள் என்று எச்சரிக்கை ஆலையமணியடிக்கிறது.

கஷ்டப்படுவதற்குச் சாப்பிட யாராவது இஷ்டப்படுவார்களா? இனிமேல் கொஞ்சம் கூடுதலாக எடையுள்ளவர்கள் சாப்பாடு என்ற சொல்லை எச்சரிக்கையாக உச்சரிக்க வேண்டும்.

சாப்பாட்டைச் 'சாதம்' என்று சொல்லலாமா என்றால் அது கொஞ்சம் பரவாயில்லை. இந்த 'சா' என்ற சொல்லும் தர்ம சங்கடமான அர்த்தத்தைத்தான்