பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த கேள்விக்குக் காலந்தான் விடை சொல்லும். மிருகங்களை வேட்டையாடி உண்ட நாட்கள் உண்டு. பிறகு வேடிக்கைக்காகக் கொன்ற நாட்கள் உண்டு. ஆனால் அந்த மிருகங்களே வைத்து எப்படி எப்படியெல்லாம் விளையாண்டிருக்கிறார்கள் அவர்கள் ?

தமிழகத்தில் ஆண்மகனைக் 'காளை' யென்று அழைப்பது மரபு. ஒரு பெண்ணோடு அந்த இல்லத்தில் வளர்கின்ற காளையினன், அந்தப் பெண்ணை மணக்க விரும்பும் வாலிபன் அடக்கிவிட்டால்தான் திருமணம் நடக்கும். அவ்வாறு காளையினை அடக்கும் வலிமையைப் பெற்றிருந்தால்தான் அக்கால ஆண்மகன் காளை எனப் பெயர் பெற்றான். ஆனால் வாழ்வா சாவா என்று வதைத்த நிகழ்ச்சிகளுக்கு வரலாறு இல்லை. இதை வீர விளையாட்டு என்று இலக்கியம் போற்றிப் பரவும். இனிவரும் விளையாட்டுக்களைப் பற்றி படித்த பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

பாய்ந்தோடும் நீரோடையின் இருபக்கத்திலும் உள்ள மரத்தை இணைப்பது போல ஒரு கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள். ஆற்றின் நடுவே இருப்பது போல ஒரு பறவையைத் தலைகீழாகக் கட்டி கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். இனி விளையாட்டு தொடங்கிவிடும். வேகமாக வரும் ஆற்றின் வெள்ளத்தோடு, படகு ஒன்று பாய்ந்து வரும். படகை இன்னும் பலர் செலுத்திக்கொண்டிருப்பார்கள். விளையாட்டில் கலந்து கொள்ளும் மனிதன் தயராக படகின் மத்தியில் நின்றுக்கொண்டிருப்பான். பறவை இருக்குமிடம் வந்ததும், பாய்ந்து பறவையைப் பிடித்து, படகு அந்தப் பறவையைக் கடப்பதற்குள், பறவையின் தலையைப் பிய்த்தெறிந்து விடவேண்டிய விதியின்படி, அவன் பறவையின் தலையத்திருகிட முயற்சிப்பான். தலையைத் திருகி எடுப்பதில் அவன் வெற்றி பெற்றால் அவன் வீரணாகி விடுகின்றான்