பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

குரலெழுப்பிச் சாகும் மனிதரைக் கண்டு மனம் மகிழ்ந்தனர். மன்னரும் மக்களும்.

அந்த விளையாட்டும் அவர்களுக்கு அலுப்பூட்டியது. ஆகவே, சிறை பிடிக்கப்பட்ட கைதிகளுக்குக் கூர்மையான ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களிலே இருவரை மட்டும் தேர்ந்தெடுத்துப் போரிடச் செய்தனர், எவனவது ஒருவன் இறந்தால்தான் போட்டி முடியும். ஒருவரை ஒருவர்வெட்டிக் கொள்வதையும், சித்திரவதை செய்வதையும் பார்த்துச் சிரித்தனர்; பரவசப்பட்டனர்.

இந்த வெறித்தனத்திற்கும் சிகரம் வைத்தது போல ஒரு மன்னன். அவன் பெயர் கிளாடியஸ் என்பது. அவனுக்கு வந்தவது இரத்த வெறியா அல்லது பைசாச உணர்வா என்று உணர முடியாத உச்சக் கட்ட கொடிய நிலை. செயற்கையாக சமுத்திரப் போன்று ஒர் ஏரியை அந்த அரசன் ஏற்படுத்தினன். 100 கப்பல்களை நிறுத்தினன், அவற்றில், பகை நாட்டில் பிடித்த 19000 கைதிகளைக் ஏற்றிக் கொண்டு அவர்களை இரு பிரிவாகப் பிரித்தான். சைசைக்குப் பிறகு அவர்களை சண்டைப் போடச் செய்து அவர்கள் சாவதைக் கண்டு மனங்களித்திருக்கின்றன் மன்னன் .

பிறரை விளையாட வைத்து, பொழுது போக்குகாக அமைந்த விளையாட்டுகளை எல்லாம் மண்ணண்ட மன்னர்கள் தங்களது போர் வெறியை வெளிப்படுத்துவதற்சாகப் பயன்படுத்தினர்கள். காலம் மாற மாற, வேடிக்கை பார்ப்போரிலிருந்து விளையாடுவோர்க்கே வெறித்தனம் ஏறிக் கொண்டுவந்திருக்கிறது.

‘கர்லி’என்ருெரு ஆட்டம்; சில நூற்றண்டுகளுக்குமுன்னே அயர்லாந்திலே மிக விமரிசையாக விளையாடபு பெற்ற ஓர் தேசிய ஆட்டம், வைளைகோல் பந்தட்டம் போன்றதொரு விதி அமைப்புடன் கையிலே ஒரு