பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இருக்கின்றனர். அவர்கள் காலடியிலே தேவமாது ஆடிய பந்து கிடக்கிறது. பந்தைக் கண்டதும், பொங்கி யெழும் கோபத்தால் இடியென முழங்குகிறான் இந்திரன். ஏனெடுத்தாய் பந்தை ? என்றுகேட்ட இந்திரனனை ஏளனமாக பார்க்கின்றனர் தம்பதிகள். ‘கன்னியின் பந்தைக் கவர்ந்த கள்ளனை கொல்கிறேன் பார்’ என்று தனது வச்சிராயுதத்தை எடுத்து வீசக் கையை ஓங்குகிறான் இந்திரன்.

ஓங்கிய கை உயரேயே நின்று விடுகிறது. நடமாடும் நாயகனும் நாடகமாடும் சிவனாரைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகக் கொடுஞ்சிறையிலே அவரால் அடைக்கப்படுகின்றான். தங்களது தலைவனைக் காணாத தேவர்கள், சிவனரின் சிறையில் இருப்பதைக் கேள்வியுற்று, தேவகுருவின் உதவியால் சிறையிலிருந்து மீட்கின்றனர். தன் கறைபட்ட செயலுக்குக் கழுவாய் தேடிக் கொள்ளத் திருக்கழுக்குன்றம் சென்றான் இந்திரன் என்பது திருக்கழுக்குன்றப் புராணம் கூறுகின்ற கதையாகும்.

பாபமும், சாபமும் தான் பந்து வாங்கித் தருமா என்றால், பல்சுவை தரும் இல்லறச்சுவைக்கும் இட்டுச் செல்லும் என்று தைரியமாகச் சொல்லாம். ஆமாம் ! சீதைக்கு இராமனைத் தேடித் தந்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறதே !

பெண்ணென்றால் சீதையாகப் பிறக்க வேண்டும் என்று அழகுக்கும், அறிவுக்கும் அடக்கத்திற்கும் சான்றாகக் கூறுவார்கள் பெரியோர்கள். சீதையானவள் மாவீரன் மன்னன் ஜனகனுக்கு ஒரே மகள் அல்லவா! செல்வச் செழிப்புடன் பருவக் கொழிப்புடன் விளையாடும் பாவையாக சீதை வளர்ந்து வரும் ஒர் நாளில் !

பூப்பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த பந்து. உருண்டோடித் தோட்டத்திற்குள் சென்று விடுகிறது. சென்ற பந்தைத் தேடிய