பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՎII -* T- "یے۔r - - - - - - - - - -سے இத்தியை வளர்க்க முடியும் என்பதால், கும்பகத்தின் சக்தியைப் பற்றி இங்கே இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் 1 மடங்கு என்பதை 4 முதல் 10 நொடிகள் வரை செய்யலாம் என்ற கணக்குண்டு. முதலில் குறைந்த நேரமே செய்யலாம். 1 மடங்கு 4 நொடி என்று கணக்கிட்டுச் செய்தால், அதனால் பெறுகிற உடல் சக்தியை இங்கே கணக்கிட்டுப் பார்ப்போம். முதல் நிலை 1 . 3 14 நொடிகள் பூரகம் 12 நொடிகள் கும்பகம் 4 நொடிகள் இரேசகம். 12 நொடிகள் நேரம் காற்றை அடக்கும் கும்பக நிலைக்கு முதல் நிலைக்கும்பகம் (Low Type) என்று பெயர். கீழ் நிலையில் பயிற்சியைத் தொடங்குவது கேவலமல்ல. இதனால் பெறுகிற பயன் என்ன வென்றால் தாராளமான, தேவைக்கு அதிகமான உயிர்க்காற்று உடலுக்கும் கிடைக்கிறது என்பதுதான். இரண்டாம் நிலை 1 : 6 14 நொடிகள் பூரகம் 24 நொடிகள் கும்பகம் நான்கு நொடிகள் இரேசகம். இதற்கு நடு நிலைக் கும்பகம் (Medium Type) என்று பெயர். இந்தக் கும்பகப் பயிற்சியால் உடலில் அதிர்ச்சி அதாவது உடலின் சக்தி எழுச்சி சற்று அதிகமாகும். மூன்றாம் நிலை 1 : 12 : 14 நொடிகள் பூரகம் 48 நொடிகள் கும்பகம் 4 நொடிகள் இரேசகம் இதற்கு உச்ச நிலைக்கும்பகம் (Highest Type) என்று பெயர். இதைத் தொடர்ந்து பழகினால் தரையிலிருந்து உடல் சற்று மேலே கிளம்பி அமரும் சக்தி கிடைக்கும் என்பார்கள். இப்படி ஒரு எழுச்சி மிகுந்த பயனை பிராணாயாமம் தருகிறது. என்பதால் வாசகர்கள் அவசரப்பட்டுவிடக்கூடாது. தனியே பயிற்சி sh – " rhan - - ാ_" (~l - - (-). ."ר", "ם