பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இதைத்தான் மிக எளிமையாய், ஒளவையார் மிக அருமையாகப் பாடிக் காட்டியிருக்கிறார். மாசற்ற கொள்கை மனத்தில் அமைந்தக் கால் ஈசனைக் காட்டும் உடம்பு. என்று பாடிய அவரும் ஒரு பக்குவமான உணர்வையும் போதித்திருக்கிறார். உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண் உத்தமனைக் காண் என்றால் எப்படி? உத்தமன் எங்கே இருக்கிறான் என்று கேள்விக்கு அப்பர் அவர்கள் மிக அருமையாக ஒரு பாடல் மூலம் பதிலளித்திருக்கிறார். என்னில் ஆரும் எனக்கு நிகரில்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுள்ளே உயிர்ப்பாய் புறம் போந்துபுக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே நமது உடம்பினுள் புகுந்து புறம் வந்து ஒடித்திரியும் உயிர்ப்பாக இருக்கிற பிராணவாயுவே, சுவாசமாக மாறி, ஈசனாக விளங்குகிறார். இயங்குகிறார், என்கிறார் அப்பர் சாமிகள். ஆக, சுவாசமே சகல சக்தி படைத்ததாக, சாமியாக, மாறி இருக்கிறது என்பது நாம் அறியாததா என்ன? அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க காற்றை, நமக்குள்ளே நின்று, அடக்கி ஆட்டுவிக்கும் வித்தைக்கு பெயர் தான் பிராணாயாமம் என்று பெருமையாக அழைக்கப்படுகிறது. மூச்சினை உள்ளே இழுப்பதை உட்சுவாசம் என்றும், வெளியே