பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

NZ டாகடா. எஸ். நவராஜ மlசலலையா சிவப்பணுக்கள் வலிமையாக இருந்தால்தான், இரத்தத்தின் நிறம் சிவப்பாக இருக்கும். இரத்தம் சிவப்பாக இருக்கிறபோது திசுக்களில் எங்கும் இரத்தம் தோய்ந்திருப்பதால்தான், அதுவும் சிவப்பாகத்தான் தோன்றும். நல்ல சீரும் சிறப்புமாக, இரத்தம் சிவப்பாக இருக்கும் போது அதன் அர்த்தம் என்ன? அந்த இரத்தத்திற்குரியவர் செழுமையுடன் இருக்கிறார். முழுமையான வலிமையுடன் திகழ்கிறார்கள். என்று அர்த்தம். அதனால் தான் பிராணாயாமப் பயிற்சியாளர்களின் உறுப்புகள் சிவந்து காட்சியளித்து, உவப்பினை அளிக்கும். சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள்காலம் 120 நாட்கள் அதற்குப் பிறகு அவை அனைத்தும் அழிந்து போகின்றன. அதாவது 1 நொடிக்கு 5 மில்லியன் சிவப்பணுக்கள் அழிந்து போகின்றன என்பது ஒரு கணக்கு. சிவப்பணுக்கள் மண்ணிரலிலும், ஹீமோகுளோபின் சத்து கல்லீரலிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. பிறகு புதிய செல்கள் தோன்ற, இவையே காரணமாகிவிடுகின்றன. சிவப்பணுக்களும், வெள்ளைனுக்களும், எலும்பு மூட்டுகளில் உள்ள எலும்புச் சோற்றில்தான் பிறக்கின்றன. நல்ல உயிர்க்காற்றின் மிகுதி கால்சியத்தை அதிகப்படுத்தி, எலும்புகளை வலிமையாக்குகின்றன. எலும்பு மூட்டிலிருந்து தோன்றும் சிவப்பு வெள்ளை அணுக்கள் வலிமையாய் இருக்க, இதுவே ரகசிய காரணமாகி இருக்கின்றன. உரோமம் கறுக்கும், தடைபடாத இரத்தம் ஒடடய தேகமெங்கும் சென்று மீண்டுவருவதால், செல்கள் செழிப்படைந்து கொள்கின்றன. அதனால், உறுப்புக்களின் உறுதியான உழைப்பும் செயல் ஒட்டமும் சிறிதும் குறையாமல், செவ்வனே நடைபெற்றுச் கொள்கிறது.