பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மார்பை நோக்கி வந்த முழங்காலைத் தொடுவதற்கு முயற்சி செய்யுங்கள். பிறகு அடுத்த காலுக்கும் அதேபோல் செயயுங்கள் ஒவ்வொரு காலுக்கும் பத்து (10) அல்லது பதினைந்து (15) முறை செய்யுங்கள். இந்த முறையான பயிற்சி வயிற்றுத் தசைகளை நன்கு இயக்கி, இரத்த ஓட்டத்தை வயிற்றுப் பகுதிக்கு அதிகமாகச் செலுத்தி, வயிற்றுச் சதைகளைக் குறைக்கும்.

3. கால் நீட்டுதல்: (Leg Stretching)

முட்டி போட்டு, முழங்காலில் உட்கார்ந்து, கைகளை நீட்டிக் குனிந்து தரையில் இருக்கவும். அந்த நிலையில் இருந்த படியே முன்புறமாக மார்பைத் தொடுமாறு கொண்டு வரவும். அவ்வாறு செய்யும் போது முழங்காலை