பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 77 ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு கூற்றை உதைக்கும் குறியது வாமே (553) காற்று நம்மைச் சுற்றிச்சுற்றி வந்தாலும், அதைப்பிடித்து, இழுத்து அடக்கி ஆட்டிப்படைக்கும் கணக்கறிவாற்றல், இல்லாமலேதான் மக்கள் இருக்கின்றனர். வாழ்ந்து கொண்டே செல்கின்றனர். அப்படி உள்ளே ஏற்றியும், அடைத்தும், வெளியே இறக்குகின்ற கணக்கை அறிந்துகொண்டு அதன்படி செயல்பட்டால், உடல் வலிமை பெற்றுவிடும். அங்கே, உயிரைக் கவர வருகின்ற கல்மனத்தவனான எமனையும், எட்டி உதைக்கின்ற வலிமை வந்து விடும். எமனை எட்டி உதைக்கலாம் என்பதால், அதை சாகா வரம் என்று நாம் சொல்லிவிடக்கூடாது. உயிர் வாதை இல்லாமல் நீண்ட நாள் வளத்தோடு வாழ முடியும் என்பதைக் குறிக்கத்தான் கூற்றையும் உதைக்கின்ற குறியாக உயர்நிலை வந்து விடுகின்றது என்று கூறுகின்றார்கள். அத்தகைய அயராத நம்பிக்கையுடன் செயல்படுகிற சிறப்புத்தான், பிராணாயாமம் பொழிகின்ற பேரின்ப நிலையாகும். காற்றைப் பிடிக்கும் கணக்கு எது? எவ்வளவு? என்ற இரு வினாக்கள் உங்கள் எண்ணத்திலே இப்போது ஊடாடிக் கொண்டிருக்கும் என்பது எனக்குப் புரிகிறது. அந்த அளவு பற்றி, இங்கே மீண்டும் சுருக்கமாகக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன். ஏறுதல் பூரகம் ஆறுதல் கும்பகம். ஊறுதல் இரேசகம். 1. பூரகம் என்பது காற்றை உள்ளே இழுத்தல், இதற்கு 16 "ாத்திரை என்றோம் 16 மாத்திரை அளவை, சிவ சிவ என்னும் "றைச்சொல்லை, நான்கு முறை மனதில் கணித்தபடியே உள்ளே இழுக்க வேண்டும். (சிவசிவ = 4, 4 முறை = 4 x 4 = 16 மாத்திரை)