பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

82



யாருக்கு எவ்வளவு என்று பிரித்துக்கொள்ளும் பொழுதுதான் தகராறு ஏற்பட்டுவிட்டது.

அதனை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முற்பட்ட பொழுதுதான், இவ்வாறு ஓட்டப்பந்தயத்தினைத் தேர்ந்தெடுத்தனர். அந்த முடிவின்படி ஒவ்வொரு பிரிவிலும் இருந்து ஒவ்வொரு ஓட்டக்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்கள் அந்த சிறிய தீவின் மேற்குப் புறப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கேதான் ஓட்டப் போட்டியானது தொடங்கி வைக்கப்பட இருந்தது. ஆர்வமுள்ள அனைவரும் அதாவது தங்களுக்கே வெற்றி கிடைக்கப்பெறல் வேண்டும் என்ற ஆசை கொண்ட அனைவரும் அங்கே அலைகடலெனக் கூடியிருந்தனர்.

யார் இந்த ஓட்டப்போட்டியில் வெற்றியடைகின்றாரோ, அவரது நாட்டுக்கு அந்தத் தீவின் வளமான பகுதியாகப் பார்த்து அதிகமான நிலப்பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. தோற்றவருக்கோ அவர் எடுத்துக்கொண்டது போக மீதியுள்ள பகுதிதான் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஒட்டப் பந்தயம் தொடங்கியது. பதைபதைக்கக் காத்திருந்த கூட்டத்தை நோக்கி வெற்றி வீரராக ஓடிவந்தவர் பிரெஞ்சு நாடு, தீவினில் தங்களுக்குத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றது. இந்தத் தீர்ப்பை டச்சுக்காரர்களும் மனமார ஏற்றுக்கொண்டனர். முனுமுனுக்கவில்லை.

விளையாட்டுப் போட்டிகள் மனமகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, வாழ்க்கைப் போராட்டத்திற்கும், வளமான தீர்ப்பினை சுமுகமாக வழங்கவும் உதவியிருக்கிறது பார்த்தீர்களா? வரலாற்றிலேயே இது ஒரு அற்புதமான போட்டிதான். சுவையான சம்பவம்தான்.