பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paackage

331

page-image buffer


P

package, application : பயன்பாட்டுத் தொகுப்பு

packet assembler/disassembler : பொட்டலச் சேர்ப்பி/பிரிப்பி; பொதிச் சேர்ப்பி|பிரிப்பி : ஒரு பொட்டல இணைப்பகப் பிணையத்துக்கும், பொட்டல இணைப்பகமல்லாக்கருவிக் கும் இடையிலான ஓர் இடைமுகம்.

packet driver : பொட்டல இயக்கி,பொதி இயக்கி.

packet smigginig : பொதி முகர்தல்.

packet filtering : பொட்டல வடி கட்டல்; பொதி வடிகட்டல் : ஐபி முகவரிகளின் அடிப்படையிலான பிணைய அணுகலைக் கட்டுப்படுத் தும் செயல்பாடு. பொதுவாக, தீச்சுவர் (firewall) அமைப்புகள் வடிகட்டி களைக் கொண்டுள்ளன. பயனாளர் கள் ஒரு குறும்பரப்புப் பிணையத் துள் நுழையவோ வெளியேறவோ அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் பணியை இவ்வடிகட்டிகள் செய்கின்றன. மின்னஞ்சல் போன்ற தகவல் பொட்டலங்களை அவை அனுப்பப்பட்ட இடத்தின் அடிப் படையில் ஏற்கவோ, புறக்கணிக் கவோ பொட்டல வடிகட்டல் முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தனியார் பிணையத்தின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

PacKIT: பேக்கிட்: ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினியில் பயன்படுத்தப் படும் ஒரு கோப்பு வடிவாக்கம். மேக் (mac) கோப்புகளின் தொகுதிகளைக் குறிக்கிறது. பெரும்பாலும் அக் கோப்புகள் - ஹஃப்மேன் முறையில் இறுக்கிச் சுருக்கப்பட்டிருக்கும்.

paged memory management unit : பக்க நினைவக மேலாண்மை அகம்: பக்க நினைவக மேலாண்மை அலகு: பல்வேறு மென்பொருள் பயன்பாடு கள் அல்லது மெய்நிகர் நினைவக இயக்க முறைமைகள் பயன்படுத்து கின்ற நினைவகப் பகுதியை அணுகு தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை நிறைவேற்று கின்ற ஒரு மென்பொருள் பாகம்.

page down : கீழ்ப்பக்கம்; இறங்கு பக்கம்.

page down key : கீழ்ப்பக்க விசை : பெரும்பாலான கணினி விசைப்பல கைகளில் காணப்படும் அடிப்படை யான விசை. PgDn எனக் குறிக்கப் பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ் வேறு விதமாக இருக்கும். பெரும்பாலான வற்றில் இதை அழுத்தியதும் காட்டி (cursor) ஆவணத்தின் அடுத்த பக்கத் தின் தொடக்கத்தில் நிற்கும். அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வரி களைக் கடந்து நிற்கும்.

page, end : முடிவு பக்கம்.

page footer : பக்க முடிப்பு.

page footer key : பக்க முடிப்பு விசை.

page header band : பக்கத் தலைப்புப் பட்டை.

page-image buffer : பக்க-படிம இடையகம் : பக்க அச்சுப் பொறியில் பயன் படுத்தப்படும் நினைவகம். ஒரு பக்கத்திலுள்ள பிட்மேப் படிமத்தை தாங்கியிருக்கும். அச்சுப் பொறியிலுள்ள ராஸ்டர் படிமச் செயலி பக்கத்தை வடிவமைக்கும்