பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


இளையகாலங்களில் மகிழ்ச்சியுடன் இருந்தது போலவே, முதுமையிலும் இன்பமாக வாழ முடியும்.

எப்படி? அதுதான் அற்புதமான ரகசியமாகும்.

60,70, 80 வயதானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? நமக்கு இயலாமை வந்து விட்டது. இஷ்டம் போல் எங்கும் போக முடியவில்லை. தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறோம். தள்ளாமை தான் காரணம் என்று தானே நினைக்கின்றார்கள்!

அப்படி நினைக்கத் தூண்டுகிற காரணங்களை நாம் இங்கே கண்டுபிடித்து விடுவோம். பிறகு, காரணங்களுக்கேற்ப காரியங்களை செய்வது தான் பகுத்தறியும் பெருமைபெற்ற ஜாதிக்கு மகிமையாகும். அதில் ஓர் அங்கம் தானே நாமும்.

இங்கே பாருங்கள்
20 வயது இளைஞன் ஒருவனின் இயக்கத்தைப் பாருங்கள். அவன் நினைப்பதைப் போல உடலால் செயல்படுகிறான். அவன் நினைவை அவனது தசைகள் உடனே செயல்படுத்துகின்றன. இளைஞனது தசைகளுக்கு இயங்கும் ஆற்றலும் இயங்கும் வேகமும் இணையற்றவையாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒரு குத்துச் சண்டை வீரனைக் காண்போம். 20 வயது இளைஞன் தன் எதிரியைத் தாக்க நினைக்கும் வேகத்திற்கு அவனது உடலுறுப்புக்கள் ஒத்துழைக்கின்றன. முன்னும் பின்னும் வந்து நகர்ந்து, தாக்கவும் தடுக்கவும், ஒதுக்கவும் ஒதுங்கவும் கூடிய லாவகமான தன்மைகளைப் பெற்றுத் திகழ்கின்றன.

இன்னும் 5 ஆண்டுகள் கழிகின்றன. இளைஞனின் ஆற்றல் அப்படியே தான் இருக்கிறது. எண்ணத்தில் எழுச்சி