பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


எலும்புகள் வலுவிழக்கின்றன.

நிமிர்ந்து நிற்கவும், வலிமை காக்கவும் உதவுவன எலும்புகளாகும். வயதாகும் போது எலும்புகள் வலுவிழக்கின்றன. கடினத்தன்மையிலிருந்து மென்மையாகிக் கொள்கின்றன. பலஹீனம் அடைகின்றன.

எலும்பின் உட்பகுதிகள் கூடாக மாறி விடுவதால், எலும்பின் சுவர்ப் பகுதி கடினத்திலிருந்து இலேசாகி விடுகின்றன. அதனால்தான் வயதானவர்கள் எலும்பு முறிவுக்கு சர்வ சாதாரணமாக, இலக்காகி விடுகின்றார்கள்.

முகம் ஏன் மாறுகிறது?

முக அமைப்பு கூட இந்த சக்தியற்ற எலும்புகளால் தான் மாறிப் போகிறது. கீழ்த்தாடை எலும்பு மாற்றமும், பற்கள் கழன்று போவதும் மாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.

காதோரத்திற்கு கீழ்ப்பகுதி எலும்புகள், பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து இடம் பெயர்ந்து போவதால், அந்த அமைப்பு முன்புறமாக முட்டி கொண்டு வந்து விடுவதால்தான், முக அமைப்பு மாறி முதிர்ச்சியைத் தந்து, கிழட்டுத் தோற்றத்தை கொடுத்து விடுகிறது.

நிமிர்ந்து நிற்க உதவும் முதுகுப்புறமுள்ள தண்டுகள், மெலிவினால், வளைகின்றன. அவற்றை சேர்த்துக் கட்டியிருக்கும் தசைகள் சக்தியிழந்து போவதால், இறுக்கமாகக் கட்டியிழுக்கும் ஆற்றல் இழக்கின்றன. அதனால்தான கூன் முதுகுப் போடவும், குனிந்தவாறு நடக்கவும் கூடிய கொடுமை ஏற்பட்டுவிடுகிறது.

இன்னும் பாருங்கள்

மூட்டுக்களில் வலிகள் உண்டாகின்றன. எலும்புகளை இணைக்கின்ற இணைப்புத் திசுக்கள் தங்களது விரிந்து