பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



63

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இவ்வாறு கிரிக்கெட் மேல் எல்லையில்லாக் காதல் கொண்டு, எங்கே போட்டி நடந்தாலும் போய் பார்ப்பது, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பங்குகொண்டு ஆடிமகிழ்வது என்று இருந்தார் ஒரு மன்னர். அவர் பெயர் பிரடெரிக் லூயுஸ் (Fredrick Louis).

இரண்டாம் ஜார்ஜ் எனும் மன்னனின் இதயம் கவர்ந்த மகனாக விளங்கிய பிரடரிக், வேல்ஸ் இளவரசன் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1730 - 1740க்கு இடைப்பட்ட காலங்களில், கிரிக்கெட் ஆட்டத்தின் பிரதானக் காப்பாளராகவும் விளங்கியிருக்கிறார் என்று பெருமையுற வரலாறு விரித்துரைக்கின்றது.

ஒருநாள் வேல்ஸ் இளவரசனான பிரடெரிக், பயிற்சிக்காக பந்தை அடித்தாடிவிளையாடிக்கொண்டிருக்கும் பொழுது. அவர் உடம்பில் பந்து பட்டுவிட்டது. பட்டது என்றால் பட்டு போன்ற மேனியில் தாக்கியது என்றுதானே,அர்த்தம்!

இது 1750ம் ஆண்டு நடந்தது. அதன் விளைவாக பெரிதாக ஒன்றும் ஏற்படாது என்று எண்ணிக் கொண்டிருந்தார் போலும். ஆனால், அது உள்காயம் ஆகி, சீழ்பிடித்து விட்டது.

அதே ஆண்டு மார்ச் மாதம், பிரெடரிக் ஒரு விருந்தின் பொழுது, ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது, உள்ளே கட்டியாக பிடித்திருந்த சீழானது (Abcess) வெடித்து, அதன் காரணமாக அவர், அகாலமரணம் அடைந்தார்.

ஆதரவளித்தவர் என்றுகூட பார்க்கவில்லை என்று கிரிக்கெட் ஆட்டத்தைத் திட்டி தீர்த்தவர்களே அதிகம். மன்னன் மரணமடைந்தான், இனிமேல் மக்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடவிடாமல் தடை செய்யப் பேர்கிறார்கள்