பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

67



கொண்டு வர சிறிது கடினம் என்று நினைத்தால் இப்படி நடந்து கொள்ளலாம்.

வாரத்திற்கு ஒருமுறை என்பது கரும்பு, வாரத்திற்கு இருமுறை என்பது வரம்பு தினம்தினம் என்பது குறும்பு.

குறும்பு நலிவுக்குக்கொண்டு ஆளை நசுக்கியே விடும் என்பதால், ஆண் பெண் இருவரும் அறிவுள்ளோராக நடந்து கொள்வதே நல்லது.

அந்தக் குறும்பால் என்ன ஆகும் என்பதையும் கூறினால் தானே அதன் அபாயமும் எனக்கு விளங்கும்!

உடலுறவு அதிகமாக ஆக, உடலில் களைப்பும் இளைப்பும் அதிகமாகும். அதனால் நரம்புக் தளர்ச்சி ஏற்படும். அன்றாட செயல்களில் ஈடுபட அதிக நாட்டம் இல்லாமல் அசந்து போகும். அசதி நிறையும்.

அசதி அதிகம் உள்ள உடம்பில் ஆர்வம் இருக்காது. ஆர்வம் குறையக்குறைய, முன்னேற்றம் தடைபடும். வருவாய் குறையத் தொடங்கும். நாளுக்கு நாள் கவலைதோன்றத் தொடங்கும். பிறகு 'ஆண்குறி எழாமையால் இயலாமையும் ஏற்பட்டு விடும். இயலாமை ஆணுக்கு வந்துவிட்டால் அது கணவன் மனைவி உறவில் பெரும் பிளவினை உண்டாக்கிவிடும்.

ஒன்றே ஒன்றை இறுதியாகச் சொல்கிறேன். கரும்பு இனிக்கிற தென்றால் வேரோடு பிடுங்கி தின்னக் கூடாது. சீளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. இது உடலுறவுக்கு "டுமல்ல. பெண்ணோடு சேர்ந்து வாழ்வதற்கும் பொருந்தும் என்று உலகநாதர் கூறிமுடித்தார்.