பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

93



நினைவெல்லாம் இன்பந்தான். தனது இலட்சியங்களை நண்பனுக்குக் கூறி நல்லாதரவு கேட்பதுபோலவே, வாழ்வின் இலட்சியங்களுக்கு மனைவியைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு, அந்தரங்க உறவுக்கு அருமையான உறவாக, பணிகளை மேற்கொள்ளும் பக்குவமுள்ள பாங்கராக மாற்றிக்கொண்டால், மகிழ்ச்சியே வாழ்வில் விளையுமே தவிர, மறு எண்ணத்திற்கு அங்கு இடமே இல்லை.

பெண்ணைப் புரிந்து கொண்டு விட்டால் பேரின்பம் என்றாரே புலவர்கள். அது உண்மைதான் என்று முடித்தார் உலகநாதர்.

சுமையாக இருக்கும் என்றல்லவா நினைத்தேன். குடும்ப வாழ்வை, சுவையானது என்றல்லவா நீங்கள் கூறிவீட்டீர்கள்!

ஆமாம்! இது என் வாழ்க்கை அனுபவம் ! வழிவழியாக வந்த முன்னோர்கள் வழங்கிச்சென்ற நல்ல நூல்களில் நான் கற்ற பாடம்.

வாழ்க்கைப் பயணம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அதில், வாழ்வின் இலட்சியம் மகிழ்ச்சியான வாழ்வு என்பது, எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்.

ஒரு கோயிலை அடைய பல வழிகள் இருப்பதுபோல, மகிழ்ச்சிக் குறிக்கோளை அடைய பல முறைகள் உள்ளன. நல்லபாதையில், நல்ல மனதுடன் நடந்து செல்லும் தம்பதிகள் நலமாகவே நடந்து, நலமாகவே மகிழ்ச்சிக் கோயிலை அடைகின்றனர்.

இருபுறமும் முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்படும்  தம்பதிகள், இழுத்துப் பறித்துக்கொண்டு நுகத்தடியில் பூட்டப்பட்ட முரண்பட்ட காளைகள் வெவ்வெறு திசை