பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


நம் முன்னோர்கள், ஒழுக்கம் தவறுதற்குரிய காரணங்களை எல்லாம் தொகுத்துத் தந்திருக்கின்றார்கள். அவர்கள் கூறிச் சென்றதையே உனக்கும் அப்படியே தொகுத்துக் கூறுகிறேன். எந்தத் தவறுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையே தான் காரணமாகும். அதை மனதில் வைத்துக்கொள். நான் கூறப்போகும் காரணங்கள் எல்லாம் சந்தர்ப்பங்களால் ஏற்படுவனவேயாகும்.

காதல் உறவிலே அதிக சக்தியில்லாமல், தொய்ந்து போகின்றவன் ஒருவனின் மனைவி; தினம் உறவு இன்பத்தை அதிகம் எதிர்பார்த்து, கணவனிடம் வீரிய சக்தி இல்லாமல் போகின்றதால் எரிச்சல் கொண்ட பெண்; மற்ற எந்த விதமான தகுதியும் இல்லாமல், மனைவியே சதம் என்று பின்னால் அலைந்து கொண்டிருக்கும் சோம்பேறியின் மனைவி; கனியே, பொன்னே, மணியே என்று கொஞ்சுவான் கணவன் என்று கருதி வந்து, குடும்பம் ஏற்று மனைவியான ஒருத்தி, தன் கணவனால் வெறுக்கப்படுகின்ற, உதைக்கப்படுகின்ற நிலையில் தன் ஆத்ம திருப்திக்காக, உடல் திருப்திக்காக மற்றொருவனை நாடி மாறிவிடுவதும் உண்டு.

கணவன் தன்னை வெறுக்கிறான் என்றும், கணவன் தன்னை மதிக்கவில்லை என்றும் உணர்ந்து கொண்ட பெண்ணும்; மற்ற பெண்களிடம் தன் கணவன் உடல் உறவு கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொண்ட பெண்ணும், தன் கணவனைப் பழிவாங்குவதற்காகவே தவறு செய்ய முற்பட்டு சில சமயங்களில் ஒழுக்கம் கெட்டு விடுகின்றாள்.

கணவனிடமிருந்து நீண்ட நாட்களாகப் பிரிந்திவயோதிகனை மணந்தது கொண்டு பெண்ணும் கண்ணுக்கு கவர்ச்சியில்லாத