பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


வாழ்வுக்குத் துணையாக ஆணுக்குப் பெண் வருவதால்தான், 'துணைவி', மனைவி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அதனால் யாருக்கு என்ன லாபம்? லாபமே அங்குதான் ஆரம்பிக்கிறது வாசு. வாழ்க்கை வியாபாரத்தின் முதலீடு 'ஆண் பெண்' என்றால், பெறுகிற ஆனந்தம் தான் நிகரலாபம். அதுதான் வெற்றி. வியாபாரத்தைத் திறமையாகச் செய்யாவிட்டால், துன்பம் என்ற நஷடம் மட்டும் வருவதில்லை. வாழ்க்கையே படுத்துப் போய்விடும். ஊரும் உலகமும் ஏசும்.

வியாபாரிகள் நல்ல சுறுசுறுப்பின்றியும், மந்தமும் மதமதர்ப்பும் கொண்டிருந்தால், நஷடமும், தோல்வியும் ஏற்படும். அத்துடன் அவமானமும் நேரிடும்.

'திருமணத்தில் லாபம் என்றால் வெற்றி என்கிறீர்கள் வெற்றி வந்து என்ன பயன்?

குறள் தெய்வமாம்சமாக இருந்ததால் தான்திரு' என்ற அடைமொழி கொடுக்கப்பெற்று திருக்குறள் ஆயிற்று. தெய்வத்தைப் பற்றியப் பாடிய நூல்களுக்கே திரு என்று வழங்கப்பெற்றன. அதாவது, திருமுருகாற்றுப் படை என்பது போல, அது போலவே, ஆண் பெண் சேர்ந்து செய்கின்ற மணமும் தெய்வாம்சம் நிரம்பியிருக்கிறது என்பதால்தான். 'திருமணம்' என்று, பெயரிலே பக்திபெருக் கோடு அழைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

வெற்றி வந்து என்ன பயன் என்று கேட்டாயே! சொல்கிறேன்! ஒருவனுடைய வாழ்க்கையை பரிபூரணமான வாழ்க்கை, முற்றுப்பெற்ற வாழ்க்கை என்பதெல்லாம் திருமணமாகிக் குழந்தைகள் பெற்றபிறகுதான். இதற்கு உதாரணமாக ஒன்று சொல்கிறேன். புத்தருடைய வாழ்க்கையை முற்றுப் பெற்ற வாழ்க்கை என்றும், மணம் செய்து கொள்ளாத ஏசுநாதரின் வாழ்க்கையை முற்றுப் பெறாத வாழ்க்கை என்றும் பல பெரியோர்கள் கூறுகின்றனர். பிள்ளைப் பேறில்லாத தம்பதிகள் 'புத் என்னும் நரகத்தில்