பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி வாழ்கிற நல்லறம் தாக்கும் இல்லறத்தார் எல்லாருமே யோகிகள். உள்ளத்தை அலை பாய விட்டு, உடலை நிலைமாற விட்டு விட்டு ஒரளவு கட்டுப்பாட்டுடன் வாழ்கிறவர்கள் போகிகள். எதற்கும் கட்டுப்படமாட்டோம் என்று ஈனத்தனமாக வாழ்கிறவர்கள் நோய் பிடித்தலைகிற ரோகிகள். என்ன செய்யப் போகிறோம் என்ற ஏங்கித் தவித்து பிரலாபித்து பித்தர்களாகத் துடித்து வாழ்கிறவர்கள் சோகிகள். வாயாலும் நோயாலும் வதைபட்டு, நிலைகெட்டு வாழ்வே கெட்டு, விரைவாக வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் வேகிகள் (வேகமானவர்கள்) இத்தகைய மக்கள் இல்லாத இனிய சமுதாயத்தை, உள்ளத்தாலும் உடலாலும் உயர்ந்த வாழ்வு யோகிவரை உருவாக்குகிற உபாயம் தான் பிராணாயாமம். இந்தப் பிராணாயாமம் பற்றிய சுவையான அறிமுகம், சுகமான விளக்கம், சுமுகமான இயக்கம் பற்றிய இந்த நூல், என்றென்றும் உங்களுக்கும் உதவும், வழிகாட்டும், வாழ்வு தரும் என்ற நம்பிக்கையுடன் படைத்திருக்கிறேன். எனது இலக்கிய விளையாட்டுத்துறை நூல்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகிற அன்பர்கள் அனைவருக்கும் என் அன்பினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலை அழகுற அச்சிட்டுத் தந்திருக்கின்றார்கள் திரு. ஆடம் சாக்ரட்டீஸ். அவர்களுக்கு என் அன்பு நன்றியும் பாராட்டும். லில்லி பவனம் நன்றியுடன் ിജ്ഞങ്ങ -17. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ^ நூல் ஆசிரியர் நூல் முதல் பதிப்பின் போது எழுதிய முன்னுரை அவப் 11 – (Ծ, , - /æY.-: * = - ~~.". .." Г\ ------ + .